அடுத்த ஆண்டு ஜனவரியில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எப்போது நடக்கிறது என்றுப் பார்ப்போம்.
தமிழகத்தில் சமீபக்காலமாக பலவிதமான திருவிழாக்கள் ஷோக்கல் நடைபெற்று வருகின்றன. மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கார் ஷோக்கள், புத்தக கண்காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வப்போது பல இடங்களில் Street festivals நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட ஏர் ஷோ நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடந்த இந்த கண்காட்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கோலாகலப்படுத்தினர்.
பலருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும்விதமாக அமைந்த இந்த கண்காட்சி தமிழகம் முழுவதும் புகழ்பெற்றது. ஏனெனில், நேரலை மூலம் தமிழக மக்கள் அனைவரும் கண்டுகழித்தனர். இதில் சில சிக்கல்கள் இருந்தாலும், அவை உடனே சரிசெய்யப்பட்டன.
அந்தவகையில் அடுத்ததாக பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஷோவை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். வழக்கமாக ஜல்லிக்கட்டு நடத்தி மக்களை உற்சாகப்படுத்துவது காலம் காலமாக நடந்து வரும் விஷயம். சில இடங்களில் இது குறைந்துவிட்டாலும், நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக இன்றளவும் பல இடங்களில் நடைபெற்றுதான் வருகிறது.
அந்தவகையில் இப்போது பலூன் திருவிழா முதல்முறை நடத்தப்படவுள்ளது. சென்ற ஆண்டு 11 நாடுகளில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது.
இதனையடுத்து இந்தமுறை தமிழக அரசு பலூன் திருவிழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளது. தற்போது திட்டமிட்டப்படி மதுரை, சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பலூன் திருவிழாவை நடத்தவுள்ளனர். ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற வாய்ப்புள்ளது என்றும், சரியான தேதியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற கண்காட்சிகளால்தான் எப்போது ஒவ்வொரு பக்கம் ஓடும் மக்கள், அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனாலும், ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக நிகழ்ச்சிகள் நடத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது மட்டும் குறிப்பிட வேண்டிய ஒன்று.