SBI வாடிக்கையாளர்களே மறக்காதீங்க! ஜன.15-க்குள் இதை செய்யலைனா உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்..!

வாடிக்கையாளர்கள் வரும் ஜனவரி 15-ம்தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம் அல்லது நிரந்தரமாக மூடப்படலாம் என SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
state bank of india
sbiEditor 1
Published on

பாரத ஸ்டேட் வங்கி (SBI) (State Bank of India) என்பது இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாகும். SBI வங்கி தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வரும் ஜனவரி 15-ம்தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம் அல்லது நிரந்தரமாக மூடப்படலாம் என வங்கி தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் படி கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய மாற்றமாகும்.

சமீபகாலமாக, RBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஹேக்கர்கள் சமீபகாலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி நாடுமுழுவதும் நிறைய மோசடிகள் நடந்து வருவதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி வரும் ஜனவரி 15-ம்தேதியில் இருந்து புதிய விதிகள் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.அதன்படி உங்களுடைய KYC விவரங்கள் வங்கியில் அட்டேட்டாகி இருக்க வேண்டும்.

அதாவது உங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள், நீங்கள் வங்கியில் கொடுத்த விவரங்களுடன் பொருந்த வேண்டும். ஒருவேளை ரொம்ப நாட்களாக நீங்கள் வங்கிக்கு செல்லவில்லை அல்லது வங்கியில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால் உங்களுடைய வங்கி கணக்கு செயலற்ற பட்டியலில்(inactive list) சேர்ந்து விடும். அப்படி ஆகும்பட்சத்தில் வங்கியில் இருந்து உங்களால் பணத்தை எடுக்கவோ, யாருக்கும் அனுப்பவோ முடியாது.

இதையும் படியுங்கள்:
SBI கார்டு வெச்சிருக்கீங்களா? 2026-ல் ரூல்ஸ் மாறுது! புது அப்டேட் இதோ..!
state bank of india

அதேபோல் வரும் 15-ம்தேதியில் இருந்து எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணத்தை எடுக்கும் வரம்பை (atm withdrawal limit) நிர்ணயித்துள்ளது. அதாவது உங்களிடம் இருக்கும் கார்டை பொறுத்து நீங்கள் ஏடிஎம்மில் எடுக்கும் பணத்தின் அளவு மாறும். classic, maestro debit card இருந்தால் ஒரு நாளைக்கு 20,000 மட்டும் தான் எடுக்கமுடியும். இதுவே உங்களிடம் gold debit card இருந்தால் 50,000 ரூபாய் வரை எடுக்கலாம். platinum debit card வைத்திருந்தால் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் ஏடிஎம்மில் எடுத்துக்கொள்ளலாம்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் தான் இந்த லிமிட் வரையறுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது

1. வரும் 15-ம்தேதிக்குள் உங்கள் எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று உங்களுடைய KYC அட்டேட்டாகி உள்ளதாக என்பதை சரிபார்க்கவும். அத்துடன் உங்களிடம் தற்போதுள்ள புதிய ஆதார் மற்றும் பான் கார்டை வங்கியில் கொடுத்து சரிபார்த்து கொள்ளவும்.

2. அதேபோல் உங்களது வங்கி கணக்கு ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

3. உங்களுடைய போன் நம்பர் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது தான் வங்கிகளில் இருந்து வரும் அனுப்பப்படும் முக்கியமான மெசேஜ்கள் உங்களுக்கு வரும்.

அதுமட்டுமின்றி எஸ்பிஐ உடைய yono app மூலமாக உங்களுடைய வருமான வரி கணக்கை வரும் 15-ம்தேதி வரைக்கும் இலவசமாக தாக்கல் செய்ய முடியும். இதற்காக Bank Tex2win என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சில சமயம் மோசடி நபர்கள், நாங்க எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய கணக்கு முடக்கப்படும். உடனே இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்களுடைய விவரங்களை கொடுக்க சொல்லி போனிலோ, மெசேஜிலோ கேட்பார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எஸ்பிஐ ஒருபோதும் உங்களிடம் போனில் ஓடிபி கேட்க மாட்டார்கள். அப்படி யாராவது உங்களிடம் கேட்டால் அவர்கள் 100 சதவீதம் திருடர்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வங்கியும், அரசும் ஏன் இப்படி அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றால் நிறைய பேர் வங்கியில் கணக்கு தொடங்கி விட்டு அதில் பரிவர்த்தனை ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

இப்படி அதிகநாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளை ஹேக்கர்கள் சுலபமாக டார்கெட் செய்து கருப்பு பணத்தை மாற்றுவதற்கும், வேறு மோசடிகளுக்கு பயன்படுத்தும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்கு தான் எஸ்பிஐ வங்கி இந்த அதிரடி உத்தரவை அறிவித்துள்ளது.

ஒருவேளை நீங்கள் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருந்தால் KYCஐ எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று வங்கிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

KYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள்

ஒரிஜினல் ஆதார் கார்டு

ஒரிஜினல் பான் கார்டு

சமீபத்திய பாஸ்பேட் சைஸ் போட்டோ

இந்த ஆவணங்களை கொண்டு சென்று KYC விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுத்தால் போதும்.

ஒருவேளை நீங்கள் சொந்தமாக தொழில் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு cash credit இல்லையென்றால் over draft வசதி இருந்தால் அதற்கான சம்பிரதாயங்களையும் வரும் 15-ம்தேதிக்குள் முடிக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில் அந்த வசதிகள் கட்டாக வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க... SBI வங்கியில் டிசம்பர் 1 முதல் இந்த சேவை கிடையாது...!!
state bank of india

எஸ்பிஐ கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்கள் எல்லாம் நம்முடைய நல்லதற்கு தான். ஏடிஎம் லிமிட் குறைந்ததனால் ஒருவேளை உங்களது கார்டு திருடு போனாலும் அல்லது யாராவது தவறாக பயன்படுத்த நினைத்தாலும் உங்களுடைய பணம் பெரியஅளவில் போகாது. இது ஒரு வகையான பாதுகாப்பு கவசம் தான் என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com