

விமான நிலைய நெரிசலில் சிக்கித் தவிக்காம, ராஜா மாதிரி லவுஞ்ச்ல (Lounge) கால் நீட்டி ரிலாக்ஸ் பண்றது தனி சுகம்தான்! நீங்க ஒரு SBI கிரெடிட் கார்டு யூசர்னா, இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.
வரப்போற ஜனவரி 10, 2026 முதல், SBI கார்டு லவுஞ்ச் அணுகல் (Lounge Access) முறையில் சில அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
உங்க கார்டு என்ன "ரேஞ்ச்" அப்படிங்கறத பொறுத்து, இனி லவுஞ்சுகள் 'Set A' மற்றும் 'Set B' என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
Set A: உயர்தர 'பிரீமியம்' கார்டுகள்
உங்ககிட்ட கொஞ்சம் ஹை-லெவல் கார்டுகள் இருந்தால், நீங்க 'Set A' லவுஞ்சுகளை அனுபவிக்கலாம். தகுதியான கார்டுகள்:
Apollo SBI Card SELECT
BPCL SBI Card OCTANE
Club Vistara SBI Card
Landmark Rewards & Paytm SBI Card SELECT
PhonePe SBI Card SELECT.
எந்த ஊர்ல கெத்து காட்டலாம்? (முக்கிய இடங்கள்): அகமதாபாத்,சென்னை, பெங்களூரு (080 Lounge), டெல்லி (Encalm), மும்பை (Adani), ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நகரங்களின் டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேஷனல் லவுஞ்சுகள் இதில் அடங்கும்.
Set B: பரவலா பயன்படும் 'பிரைம்' கார்டுகள்
பெரும்பாலான மக்களிடம் இருக்கும் கார்டுகள் இந்தப் பட்டியலில் வருகின்றன. தகுதியான கார்டுகள்:
SBI Card PRIME / PRIME Pro
Titan SBI Card
KrisFlyer SBI Card
மேலும் பல கோ-பிராண்டட் (Co-branded) பிளாட்டினம் கார்டுகள்.
எங்கெல்லாம் செல்லுபடியாகும்? அகமதாபாத்,சென்னை, கோவை, பெங்களூரு, கோவா,புவனேஸ்வர்,சண்டிகர்,கொச்சின், கோவா எனப் பரவலான நெட்வொர்க் இதில் உண்டு.
ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நியூ டெல்லி, புனே, ஸ்ரீநகர், வதோதரா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில், SBI கார்டின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பல்வேறு டெர்மினல்களில் (முனையங்களில்) பங்கேற்கும் லவுஞ்ச்கள் உள்ளன.
உள்ளே நுழைய கட்டணம் உண்டா? (Verification Fee)
லவுஞ்ச் வாசலில் கார்டை ஸ்வைப் செய்யும்போது சின்னதாக ஒரு கட்டணம் பிடிப்பார்கள். அது கார்டு வகையைப் பொறுத்து மாறும்:
Visa & RuPay கார்டுகள்: ரூ. 2 பிடிக்கப்படும் (இது திரும்பக் கிடைக்காது - Non-refundable).
Mastercard: ரூ. 25 வரை கணக்கில் ஹோல்ட் (Hold) செய்யப்படும் (பயப்பட வேண்டாம், இது டெபிட் ஆகாது).
உஷார் அய்யா உஷார்! (Terms & Conditions)
அனுமதி வரம்பு கவனம்!: எல்லா கார்டுக்கும் அன்லிமிடெட் ஆக்சஸ் கிடையாது. உங்க கார்டுக்கு வருஷத்துக்கு எத்தனை விசிட் ஃப்ரீனு செக் பண்ணிக்கோங்க. கோட்டா முடிஞ்சா, காசு கொடுத்துதான் உள்ள போகணும்.
எக்ஸ்ட்ரா என்ஜாய்மென்ட்: லவுஞ்ச் உள்ளே சாப்பாடு ஃப்ரீயா இருக்கலாம். ஆனா, "மதுபானம்" (Alcohol), ஸ்பா (Spa) அல்லது மசாஜ் கேட்டீங்கன்னா, அதுக்குத் தனி பில் வரும்!
ஃபைனல் டச்...
இந்த புதிய விதிமுறைகள், ரூ. 1,499 மற்றும் ரூ. 2,999 ஆண்டுக்கட்டணம் கொண்ட கார்டுகளுக்குப் பொருந்தும்.
அதனால , அடுத்த தடவை ஃபிளைட் ஏற பேக் பேக் பண்றப்போ, உங்க பாக்கெட்ல இருக்கறது Set A கார்டா இல்ல Set B கார்டானு ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க! ஹாப்பி ஜர்னி!