ஒரு லட்சம் துண்டுகளாக வெட்டப்பட்ட பண நோட்டுகளை இணைத்த வங்கி ஊழியர்கள்… சீனாவில் சுவாரசியம்!

Money
Money
Published on

பெய்ஜீங்கில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், பண நோட்டுகளை 1 லட்சம் துண்டுகளாக வெட்டிப் போட்டுள்ளார். இந்த நோட்டுகளை வங்கி ஊழியர்கள் இணைத்து மீண்டும் முழு வடிவ பணமாக்கியது, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஜான் என்ற பெண் குன்மிங்கிலுள்ள ICBC எனும் சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கிக்கு வெட்டப்பட்ட நோட்டுகளை எடுத்துச் சென்றார். ஐந்தாண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட மைத்துனியால் இந்த பண நோட்டுகள் வெட்டப்பட்டன என்று கூறினார். மேலும் அவர் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் கூறினார். அதன்பிறகு தற்போது தனது குடும்பம் ஏழ்மையில் உள்ளதாகவும், சேதமடைந்த நோட்டுகளை சரி செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

சீனாவில் கிழிந்த நோட்டுகளையும் கறைப் படிந்த நோட்டுகளையும் மாற்றலாம் என்றாலும், இந்த பெண் இதற்கு முன்னர் பல வங்கிகளை அணுகியிருந்தார். ஆனால், யாருமே அந்த நோட்டுகளை மாற்றவில்லை. இறுதியாகவே இந்த வங்கிக்குச் சென்றார்.

ஒரு 10 வெட்டப்பட்ட நோட்டுகளை இணைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருக்கும். ஆனால், இங்கே 32 ஆயிரம் யுவான் மதிப்புள்ள பண நோட்டுகளை அந்த வங்கி ஊழியர்கள் பல இன்னல்களுக்கு பின்னால், ஒன்றிணைத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
News 5 – (30-07-2024) பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம்!
Money

இதன்மூலம் அந்த பெண், தான் இழந்தப் பணத்தை மீண்டும் பெற்றார். அதேபோல் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், அந்த வங்கி ஊழியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

நம்மளாம், லேசா கிழிஞ்ச பத்து ரூபா நோட்ட எப்படியெல்லாம் மடக்கி, தெரியாத மாதிரி செஞ்சு கடக்காரங்கக்கிட்ட கொடுப்போம். ஆனால், பாருங்களேன்… வெட்டப்பட்ட நோட்டுகள ஒன்றிணைத்து கொடுத்து,, பணத்த.. ஒரு காகிதமா நெனச்சு எவ்வளவு பெரிய உதவி செஞ்சுருக்காங்க… அந்த மனசுதான் சார் கடவுள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com