

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் (Punjab National Bank) வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 940 காலிப்பணியிடங்களுக்கு (வங்கி வேலை)தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி :
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். இது பற்றிய முழு விவரங்கள் வருமாறு;
பணி நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி.)
காலி பணி இடங்கள்: 545 (தமிழ்நாடு -51)
பதவி: லோக்கல் பேங்க் ஆபீசர் (எல்.பி.ஓ.)
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. மேலும், ரிசர்வ் வங்கியின் அட்ட வணையில் இடம்பெற்றுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய ஊரக வங்கியில் கிளார்க் / அதிகாரி பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1-7-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மொழித்திறன் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-8-2026
தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்டு/செப்டம்பர்
விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://pnb.bank.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா :
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யூனியன் வங்கியில், மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் என இந்தியா முழுவதும் காலியாக உள்ள மொத்தம் 395 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 10-ம்தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலாளர் (Manager) :
காலியிடங்களின் எண்ணிக்கை: 163
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 21 லட்சம்
மூத்த மேலாளர் (Senior Manager) :
காலியிடங்களின் எண்ணிக்கை: 153
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 25 லட்சம்
தலைமை மேலாளர் (Chief Manager) :
காலியிடங்களின் எண்ணிக்கை: 52
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 30 லட்சம்
உதவிப் பொது மேலாளர் (Assistant General Manager) :
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 38 லட்சம்
துணைப் பொது மேலாளர் (Deputy General Manager) :
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 47 லட்சம்
மொத்தம் 395 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அனைத்து பதவிகளுக்கான கல்வி மற்றும் வயதுத் தகுதி :
வயது வரம்பு தளர்வு: பதவியைப் பொறுத்து, குறைந்தபட்ச வயது 22 ஆண்டுகளில் இருந்தும், அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் வரையிலும் இருக்கும். மத்திய அரசு விதிகளின்படி முன்னாள் ராணுவ வீரர்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு, குழு கலந்துரையாடல் (நடத்தப்பட்டால்), விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், நேர்காணல் மற்றும் இறுதித் தகுதிப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/ubijul26/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பெரும்பாலான பதவிகளுக்கு, தேவையான பணி அனுபவத்துடன் பட்டதாரி, BE/B.Tech, MCA, MBA, CA, சட்டம், கட்டிடக்கலை அல்லது பிற தொடர்புடைய தொழில்முறைப் பட்டம் தேவைப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2026
விண்ணப்ப விவரங்களைத் திருத்துவதற்கான காலக்கெடு முடிவு : 10.08.2026
Last date for printing your application : 25.08.2026
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1180. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 177. ஆன்லைன் மூலம் கட்டணத்தை 21.07.2026 முதல் 10.08.2026 வரை செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள், காலிப்பணியிடங்கள், தகுதி, முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை போன்ற அனைத்து முக்கிய விவரங்களையும் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிப்பதற்கு முன் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.