காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க பெங்களூரு கோர்ட் உத்தரவு!

காங்கிரஸ் டுவிட்டர்
காங்கிரஸ் டுவிட்டர்
Published on

காங்கிரஸ் ஏம்.பி-யான ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்த யாத்திரை தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், கருத்துக்களை வெளியிட 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் தனியே டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்தும் ராகுல்காந்தியின் இந்த பயணம் தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை வீடியோ ஒன்று அக்கட்சியின் டிவிட்டரில் வெளியிடப்பட்டது.

அதில், கே.ஜி.எப். 2 திரைப்பட பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இசைக்கான காப்புரிமையை எம்.ஆர்.டி. என்ற இசை நிறுவனம் பெற்றுள்ள நிலையில்,  தங்களிடம் முன் அனுமதி பெறாமல் கே.ஜி.எப் 2 பட பாடலின் இசையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது.

மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ் டுவிட்டர் மற்றும்  ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஆர்.டி. இசை நிறுவனம் பெங்களூரு வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில், காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு நேற்று கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் நீதிபதி இதுகுறித்து தெரிவித்ததாவது;

காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறாமல் அவர்களின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கப் பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து சட்ட ரீதியில் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com