

கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பில் சுத்த தங்கத்தினால் ஆன ராமர் சிலையை காணிக்கையாக அனுப்பி உள்ளார். இதுகுறித்து ராமர் கோவில் நிர்வாகி அணில் மிஸ்ரா கூறுகையில் கர்நாடகவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு அழகான ராமர் சிலையை பார்சல் வழியாக அனுப்பி வைத்துள்ளார்.
தங்கத்தால் தயாரிக்கப்பட்ட இந்த சிலையில் வைரங்கள் ரத்தின கற்கள் மற்றும் அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 அடி உயரம் எட்டடி அகலம் கொண்ட ராமர் சிலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதை காணிக்கையாக செலுத்திய நபர் தனது விவரங்களை தெரியப்படுத்தவில்லை. இதன் மதிப்பு சுமார் 30 கோடி வரை இருக்கலாம். வரும் நாட்களில் இந்த சிலை பற்றிய விவரமும் அதை அனுப்பியவர் விவரமும் தெரிய வரும்.
தமிழகத்தில் தஞ்சாவூரில் சிலை தொழில்நுட்ப நிபுணர்கள் ராமர் சிலை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நுணுக்கமான வேலைப்பாடுகளை கலை வடிவத்தில் கொடுத்துள்ளனர். இந்த சிலையில் என்னென்ன உலோகங்கள் உள்ளது என்பதை வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
டிசம்பர் 29 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா நடக்க உள்ளது. இந்த நாளில் காணிக்கையாக வந்து உள்ள தங்க ராமர் சிலையை பிரதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து காணிக்கைகளும் சிலைகளும் வந்த வண்ணமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.