ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோவில் பெர்லினில் திறப்பு..!

Ganesh temple in Berlin
Ganesh temple in Berlin
Updated on

ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கணேசர் கோவில், (Sri Ganesha Temple)பெர்லினில் திறக்கப்பட்டது. இந்தக் கோவில் தமிழக கட்டிட பாணியில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சுமார் 56 அடி உயரமான கோபுரத்தைக் கொண்ட இந்த ஆலயம், தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடக் கலை மற்றும் கறுப்பு கிரானைட் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி பெய்லினில் உள்ள (Neukölln பகுதி, Hasenheide Park அருகில்) ஹசென்ஹைட் பூங்காவின் அருகில் 17 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்துடன் கம்பீரமாக உள்ளது ஸ்ரீ கணேஷ்வரர் கோவில்.

2026 ஜூன் 3 முதல் 7 வரை ஐந்து நாள் கோலாகலமான திருவிழா நடைபெற்று ஜூன் 7 அன்று கங்கை மற்றும் பெர்லினில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் கிரேனின் உதவியுடன் உயரமான விமானத்தின் கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்தக் கோவிலுக்கான பணிகள் 2005 ம் வருடம் 24 செப்டம்பர் அன்று துவங்கி 21 ஆண்டுகளுக்கு பின் 7 ஜூன் 2026 ஜூன் மாதம் 7ந் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் கட்டுமானப் பணிகளுக்கான தொகை முழுக்க முழுக்க நன்கொடைகள் மற்றும் தன்னார்வ சேவையால் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்களின் கூட்டு முயற்சியால், முழுமையாக நன்கொடைகள் மூலம் கட்டப்பட்டது.தற்போது இந்தக் கோவில் பத்து தன்னார்வ நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மூன்று பூசாரிகளால் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கணேஷ்வரர் கோவில் வைணவம், சைவம், சத்தம், மார்க்கம் என அனைத்து ஆன்மீகப் பிரிவுகளையும் கடந்தும், மத வேறுபாடின்றியும் உள்ளே வரும் எவருக்கும் இக்கோவில் திறந்திருக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. பெர்லினில் வசிக்கும் குடும்பங்கள், மாணவர்கள், கலப்பு திருமணத் தம்பதிகள், பள்ளி மாணவர் குழுக்கள் என அனைவரும் வந்து பார்வையிடும் வகையில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்ற ஒரு பொதுவான வழிபாட்டுத் தலமாக இது விளங்குகிறது.

"ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்று” என்று செய்திகளில் குறிப்பிடப்படும் இக்கோவில் பணிகள் 2005 ல் துவங்கி 2015ல் முதல் கோபுரம் எழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பல கட்டுமானக் கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் தென் இந்திய பாணியை பயன்படுத்தி கைகளால் செதுக்கி வடிவமைக்கப்பட்ட கருங்கற்களால் ஆன கோபுர அமைப்பைப் போல எழுந்துள்ளது. முழுக்க தமிழ்நாட்டு திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில் என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

தினசரி பூஜை, ஆரத்தி நடைபெறும் வகையில் அனைத்து மக்களும் வந்து வழிபடும் வகையில் தமிழ் கலாசாரம் தொடர்புடன் கூடிய கோபுர வடிவமைப்பு மற்றும் கோவிலின் உள் வேலைப்பாடுகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய கோவில் கட்டிடக்கலையை பின்பற்றும் விதமாக உள்ளது பெர்லினின் கணேசர் கோவில்.

17 மீட்டர் கோபுரத்துடன் கூடிய நுழைவாயில் , மூலவராக விநாயகர் உறையும் கருவறை , ஆரத்தி மண்டபம் , சுற்று பிரகாரம் , யாகங்கள் மற்றும் பூஜை பகுதி என இது தென் இந்திய கோவில் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே பெர்லினில் சிறிய அளவிலான 'ஸ்ரீ மயூரபதி முருகன் கோவில்' திறக்கப்பட்டிருந்தாலும், தமிழ் திராவிட பாணியிலான 17 மீட்டர் உயர கோபுரத்துடனும், 20 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்புடனும் உருவாகியுள்ள இந்த ஸ்ரீ கணேசர் கோவில், தற்போது ஐரோப்பாவின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி பெண்களை தொட்டா ஆக்ஷன் ரொம்ப ஃபாஸ்டா இருக்கும்! - முதல்வர் விஜய் எச்சரிக்கை..!
Ganesh temple in Berlin
logo
Kalki Online
kalkionline.com