பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோதி… நிலவும் போர் பதற்றம்!

PM with Butan king
PM with Butan king

பிரதமர் மோதி நேற்று பூட்டான் செல்லத் திட்டமிட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாக இன்று புறப்பட்டார். சீனா, இந்தியா, பூட்டான் எல்லையில் பூட்டானுக்காக இந்திய ரானுவம் காவல் இருந்துவரும் நிலையில் சீனாவுடனான போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தியாவின் பக்கத்து நாடான பூட்டான் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஒரு எல்லை நாடாகும். இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு இருந்து வருகிறது. பூட்டான் மேல் உள்ள இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா ஒருபோதும் விரும்புவதில்லை.

இந்தியா சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லையின் இடம்தான் டோக்லாம் பீடபூமி. இந்த இடத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று சீனா முயற்சி செய்து வருகிறது. அந்தவகையில்தான் பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பீடபூமியில் இந்திய ராணுவம் குவிந்துள்ளது. சீனா இந்தியாவுடன் எப்போது போர் செய்யலாம் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்து போர்த் தொடங்கவும் வாய்ப்புள்ளது. ஆகையால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

குறிப்பாக டோக்லாம் பீடபூமி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து இருக்கும் பகுதியாகும். இதனால் இது கோழி கழுத்துப் பகுதி அதாவது சிக்கன் நெக் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதியின் மேல் சீனா அதீத கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் அடிப்படையில்தான் பிரதமர் நரேந்திர மோதி இன்று பூட்டானுக்கு அரசுப் முறை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
239 - வது முறையாக வேட்பு மனு தாக்கல்- தேர்தல் மன்னன் பத்மராஜனின் குறிக்கோள் என்ன?
PM with Butan king

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையே வழக்கமான பரிமாற்றங்கள் குறித்தும், பாரம்பரியம் மற்றும் அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுத்தொடர்பாக பிரதமர் நேற்றே பூட்டான் சென்று இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். ஆனால் நேற்று வானிலை மோசமானதால் இன்று புறப்பட்டார்.

இந்தப் பயணத்தில் பூட்டான் மன்னர் 'ஜிக்மே கேசர் நம்கியேல்  வாங்சுச்' மற்றும் நான்காவது மன்னர் 'ஜிக்மே சிங்கே வாங்சுக்' ஆகியோரை மோதி சந்திக்கவுள்ளார். அதேபோல் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பயணத்தை சீனா உற்று நோக்கி கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com