#BIG NEWS: ஆன்லைன் மோசடிக்கு செக்: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது.!

UPI Payments
UPI transaction
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனை தடுக்க ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், டிஜிட்டல் மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் யுபிஐ சேவையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி இனி 10,000-க்கு மேல் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகே பயனருக்கு செல்லும் வகையில் புதிய விதியை கொண்டு வரவுள்ளது ஆர்பிஐ.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் கோளில் திரவ நீர்த்தேக்கம்! யம்மாடியோவ், இத்தனை பெரிசா ?
UPI Payments

தற்போதைய சூழ்நிலையில் யுபிஐ மூலமாக பணம் அனுப்பினால், அடுத்த நொடியே பயனருக்கு பணம் சென்று விடுகிறது. ஒருவேளை நாம் தெரியாமல் மோசடிகாரர்களுக்கு பணம் அனுப்பி விட்டால், அதனைத் திரும்பப் பெறுவது கடினமாகிறது.

இதன் காரணமாக ரூ.10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை அனுப்பினால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகே பயனருக்கு செல்லும் வகையில் புதிய விதியை கொண்டுவர ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த விதி அமலுக்கு வந்து விட்டால், நீங்கள் அனுப்பிய தொகையைத் திரும்ப பெற நினைத்தால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் டிஜிட்டல் மோசடிகள் பெருமளவில் குறைக்கப்படும் என ஆர்பிஐ தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு போட்டியாக தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி! எதுக்கு?
UPI Payments
logo
Kalki Online
kalkionline.com