#BIG NEWS : இனி சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ்அப் இயங்காது..!

whats app
whats app
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மார்ச் 1 முதல் இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்த புதிய 'SIM-binding' விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் செயலிகள் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம் கார்டு இல்லாமல் இந்த செயலிகளை பயன்படுத்தி மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருவது அதிகரித்து வருகிறது. சிம் கார்ட் இல்லாததால் மோசடி கும்பல்களைக் கண்டறிவது காவல்துறைக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இனி பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு மொபைலில் இருந்தால் மட்டுமே whatsapp செயல்படும் என்ற புதிய கட்டுப்பாடு மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த ஆப்பை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகின்றோமோ அதன் சிம் கார்டு நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும்; அதுவும் ஆக்டிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாட்ஸ் அப் சேவை உடனடியாக துண்டிக்கப்படும்.

தேசிய பாதுகாப்புக் கருதி வாட்ஸ் அப் வெப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தானாகவே லாக்-அவுட் செய்யப்படுவார்கள். பெருகிவரும் ஆன்லைன் மோசடிகளைத் தடுப்பதற்காக இந்த 6 மணிநேர லாக்-அவுட் விதி அவசியமானது என்று மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதில் தேசிய பாதுகாப்பு கருதி 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட்டாகும் அதனை மீண்டும் பயனர்கள் க்யூ ஆர்(QR code) கோடை ஸ்கேன் செய்து லாக்-இன் செய்ய வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு மொபைலில் இருந்தால் மட்டுமே whatsapp செயல்படும் என்றும், சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயல் இழந்தாலோ வாட்ஸ்அப் சேவை உடனடியாக துண்டிக்கப்படும் என்றும் தொலைத்தொடர்பு துறையின் புதிய 'சிம் பைண்டிங்' விதிகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வசதிகளை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்றும், நாளைக்குள் அனைத்து நிறுவனங்களும் இதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த கெடுபிடிகளால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

இதன் மூலம் ஆன்லைன் மோசடிகள், போலியான கணக்குகள் மற்றும் சைபர் குற்றங்களை பெருமளவு குறைக்க முடியும். சம்பந்தப்பட்ட நபர்களைத் தவிர பிறர் மெசேஜிங் ஆப்களை பயன்படுத்துவதை தடுக்க முடியும். ஆனால் ஒரே மொபைல் எண் வைத்து பல சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கலாம். அத்துடன் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 'லாக் அவுட்' ஆனால் பயனாளர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். எனினும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இது அவசியமானது.

இதையும் படியுங்கள்:
"மனைவியா? கணவரா? - ராதிகாவின் 'தாய் கிழவி' vs சரத்குமாரின் 'ஆழி'... எது பெஸ்ட்?
whats app
logo
Kalki Online
kalkionline.com