ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் அரசின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது - பிரியங்கா காந்தி..!

Priyanka Gandhi
Priyanka Gandhi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் அரசின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மக்களவையில் அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே இத்தகைய முயற்சிகளில் அரசு ஈடுபடுவதாகவும் , பெண்கள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி நிரந்தரமாக நீண்ட காலம் ஆட்சியில் இருக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கும் மகளிர் இட ஒதுக்கீட்டிற்கும் தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மசோதா தோல்வி அடைந்ததற்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் காட்டிய ஒற்றுமையை காரணம் என்றும், இது அரசியலமைப்பை பாதுகாக்கும் செயல் என்றும் பாராட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பாஜகவும் RSS-ம் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள்- ராகுல்காந்தி கடும் தாக்கு..!
Priyanka Gandhi
logo
Kalki Online
kalkionline.com