பீகார் தேர்தல் கருத்து கணிப்பு..! வெற்றி வாகையை சூடப்போவது யார்?

EXIT POLL
EXIT POLL
Published on

தேர்தல் கருத்து கணிப்பு என்பது ஒரு தேர்தல் முடிந்த பிறகு மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து விட்டு வாக்கு சாவடியிலிருந்து வெளியே வரும் நபர்களிடம் கருத்துக்களை கேட்டு வெளியிடப்படுவது ஆகும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்த பிறகு அவற்றின் முடிவுகளுக்காக சில நாட்கள் நாம் காத்திருப்பது வழக்கம். அம்மாதிரியான இடைவெளிக்காலங்களில் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

பொதுவாக தேர்தல் ஆணையச் சட்டப்படி தேர்தல் தேதியை அறிவித்த பிறகு வாக்குப்பதிவு நடைபெறும் வரை கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாதுஎன்பதுதான் விதி. ஏனெனில் அது மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே. அதனால் வாக்குப்பதிவு முடிந்தபின் அன்று மாலை தான் தொலைக்காட்சிகளில் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அதே நேரம் ஒரு தொகுதியில் உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களில் சுமார் ஆயிரம் பேரின் கருத்துகளை அடிப்படியாகக் கொண்டே கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. எனவே, இந்த் கருத்து கணிப்புகள் சில நேரங்களில் சரியாகவும், சில நேரங்களில் எதிர்மறையாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இது சார்ந்து கருத்து கணிப்புகளும் வெளியாகி உள்ளன.இந்நிலையில் முந்தைய தேர்தல்களின் போது வெளியான கருத்து கணிப்புகள் சரியாக இருந்ததா எனவும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இதனையடுத்து கருத்து கணிப்புகள் வெளியாகிஉள்ளன. இதில் பாஜக - ஜனதா தள கூட்டணிகட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும்,அந்தக் கட்சிகளேதான் திரும்பவும் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வகையில், ஆளும் கட்சியான நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும், பாஜக கூட்டணியும், எதிர்கட்சியான மகாகத்பந்தன் (MGB) எனப்படும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டன. தனி அணியாக ஜன் சூராஜ் கட்சியை சேர்ந்த பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டார்.

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 146-167 இடங்களிலும், மகா கூட்டணி 70-90 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறுகின்றன. ஒரு சில கருத்து கணிப்புகள் மட்டும் சுமார் 100 இடங்களில் மகா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன. இருப்பினும் இந்த கருத்துகணிப்புகள் நம்பும் வகையில் இல்லை எனவும், தங்கள் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எனவும் தேஜஸ்வி யாதவ் உறுதிபட கூறிவருகிறார்.

இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது முக்கியமான 7 இந்திய ஊடக நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 350 முதல் 400 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. அதிலும் பாஜக தனித்து 280 தொகுதிகளை பெறும் எனவும் தெரிவித்தது. ஆனால் பாஜக கூட்டணி ஒட்டு மொத்தமாக 293 இடங்களை மட்டுமே பிடித்தது. 232 இடங்களை இந்தியா கூட்டணி பெற்றது. எனவே கருத்து கணிப்புகள் அனைத்தும் தவறாகவே அமைந்தது.

2020ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணிசுமார் 80 இடங்களை பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், அக்கூட்டணி 125 இடங்களை பிடித்தது. எனவே இந்த தேர்தல்களில் எல்லாம் கருத்து கணிப்பு தவறாகவே இருந்துள்ளது. எனவே இந்த கருத்து கணிப்புகள் எப்படி இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையின் போது இவிஎம் இயந்திரங்களில் உள்ள வாக்குகளே இறுதி முடிவாக இருக்கும் என்பதே உண்மை.

இதையும் படியுங்கள்:
வெறும் '1 ரூபாய்க்கு' மெட்ரோ, பேருந்து, ரயிலில் போகலாம் - தமிழக அரசு அறிவித்த சூப்பர் சலுகை..!
EXIT POLL

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com