#JUST IN : திக் திக் நிமிடங்கள்: சிக்னல் கிடைக்காமல் வானில் வட்டமடித்த பில்கேட்ஸின் தனியார் ஜெட்!

BILLGATES Jet
BILLGATES Jetsource:maalaimalar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இன்று ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை பில்கேட்ஸ் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். காலையில் அடர்ந்த மூடுபனி நிலவியதால் ஒடுபாதை தெளிவாகத் தெரியாத காரணத்தால் பில்கேட்ஸின் தனியார் ஜெட் விமான நிலையத்தை அடைந்தாலும், சிக்னல் கிடைக்காதால் உடனடியாக இறங்க முடியவில்லை. இது விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்துக் காத்திருந்தது. ஒருகட்டத்தில் பனி விலகி வானிலை சீரானதைத் தொடர்ந்து, விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரை இறக்கப்பட்டது. அதன் பின்னரே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சுடன் அவரை வரவேற்று, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

கேட்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர்- தலைவர் பில்கேட்ஸ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இது பில்கேட்ஸின் மூன்றாவது ஆந்திர பயணமாகும்.

இந்த சந்திப்பில் சஞ்சீவனி டிஜிட்டல் சுகாதாரத் திட்டம், AI மூலம் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே செயல்படுத்தி வரும் சுகாதாரத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 'சஞ்சீவனி'(டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள்) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது "ஸ்வர்ண ஆந்திரா 2047" தொலைநோக்குத் திட்டத்தைப் பில்கேட்ஸிடம் விளக்குகிறார். மேலும் அமராவதியில் உள்ள ரியல் டைம் கவர்னன்ஸ் சிஸ்டம் (RTGS) மையத்தைப் பார்வையிடும் பில்கேட்ஸ், உண்டவல்லி கிராமத்தில் AI மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் சாகுபடி செய்யப்படும் விவசாயப் பண்ணைகளையும் ஆய்வு செய்கிறார்.

இந்த சந்திப்பு ஆந்திர பிரதேசத்தில் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பேருந்து பயணத்தில் பெண்களுக்கு அசௌகரியமா.? உடனே இந்த பட்டனை தட்டுங்க.!
BILLGATES Jet
logo
Kalki Online
kalkionline.com