27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி! - அண்ணாமலையின் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

BJP
Annamalai
Published on

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில் தேசிய கட்சியான பாஜக மட்டும் இன்னும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி பங்கீடுகள் மற்றும் யார் வேட்பாளர் போன்ற குளறுபடிகள் போன்றவற்றால் வேட்பாளர் பட்டியல் இன்னும் தயாராகவில்லை என்ற கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான பாஜக வேட்பாளர்கள் 27 பேரை நேற்று கட்சியின் ஆட்சி மன்றக் குழு இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியது.இறுதி செய்த வேட்பாளர் பட்டியலுக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஒப்புதல் கொடுத்து விட்டதால் 27 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

தமிழ்நாட்டின் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயருடன் இன்றைய வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு எனவும் தகவல்கள் கூறுகின்றன. வேட்பாளர் பட்டியலில் பெயர் இருந்தாலும் தேர்தலில் போட்டியில்லை என்பதில் அண்ணாமலை உறுதியாக உள்ளதாகவும் தனது ஆதரவாளர்கள் மற்றும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தமிழக பாஜக கேட்டு பெறவில்லை என்பதால் அண்ணாமலை அதிருப்தியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் அண்ணாமலை அதிருப்தியில் உள்ளதால் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருந்தாலும் போட்டியிட விருப்பமில்லை என மீண்டும் கடிதம் எழுத அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் 27 பேரில் கட்சி ஆட்சி மன்றக் குழு இறுதிச் செய்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அண்ணாமலையின் முடிவு என்ன என்பதை எதிர்பார்த்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பில்டப் கொடுத்த சூர்யா பாய்... செக் வைத்த ஐடி அதிகாரிகள்! வெளிச்சத்திற்கு வந்த போலி தங்கத்தின் கதை..!!
BJP

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com