ஜனநாயகன் இணையத்தில் வெளியானதற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பு இல்லை - அண்ணாமலை..!

அண்ணாமலை
அண்ணாமலை
Published on

தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக திரைக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் தவெக தலைவரான நடிகர் விஜய் நடித்த இறுதி படமான ஜனநாயகன், நேற்று இணையத்தில் சில காட்சிகள் வெளியான சில நிமிடங்களிலேயே முழுப் படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக படக்குழு நிறுவனம் தனது சட்ட ஆலோசகர் மூலம் பகிர்பவர்கள் மற்றும் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த காட்சிகளை சேமித்தாலோ அல்லது பகிர்ந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திரைபிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இதற்கு காரணமானவர்களை கண்டித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்ததுடன் படத்தைப் பார்க்காமல் திரைக்கு சென்று பாருங்கள் எனவும் பட குழுவினருக்கு ஆதரவு தாருங்கள் என தங்கள் ரசிகர்களை கேட்டும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

மேலும் பல துறை பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஜனநாயகன் இணையதளத்தில் கசிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வலுவான எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு ஜனநாயகனுக்கு ஆதரவு தந்து வரும் நிலையில் தவெக நிர்வாகி ஆதவ் சுமத்திய குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டது.

"விஜய்க்கு அழுத்தம் கொடுக்கவே" திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பதே த.வெ.க.வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு.

திமுக மற்றும் பாஜக மீது அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனை அரசியலாக்க வேண்டாம் என திமுக சார்பில் சொல்லப்பட்டது.

அதே போல் பாஜகவின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையும் தற்போது மறுத்துள்ளார்.ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் பாஜகவை தொடர்பு படுத்தி பேசுவது சரி அல்ல என்று அண்ணாமலை ஆதவ் அர்ஜூனனின் கருத்தை மறுத்து எச்சரித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் திரைப்படங்கள் தயாரிப்பு பணிகளில் மிக முக்கியமானது படப்பிடிப்பு முடிந்த பிறகு செய்யப்படும் வீடியோ எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங் உள்ளிட்ட இறுதிப் பணிகளைக் குறிப்பது தான் போஸ்ட் புரொடக்ஷன். தற்போது படம் இணையத்தில் வெளியாக இந்த போஸ்ட் புரொடக்ஷன் தான் காரணம் என குற்றம் சுமத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் படத்தின் தணிக்கை சான்றிதழ் தாமதத்திற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற கோணத்திலும், படம் கசிந்ததற்கு பின்னால் உள்ள மர்மத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: புதுச்சேரி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவர் கைது.!
அண்ணாமலை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com