12 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி!

PM Narendra Modi.
PM Narendra Modi.

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜில் ஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்ரகரில் வெற்றியை குவித்ததன் மூலம் பா.ஜ.க. நாட்டில் உள்ள 28 மாநிலங்களில், 12 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதாவது பா.ஜ.க. தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலங்கானா, கர்நாடகம் மற்றும் இமாச்சல் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.

இது மட்டுமல்ல, மகாராஷ்டிரம், நாகாலாந்து, சிக்கிம, மேகாலயம் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. 2014 ஆம் ஆண்டில் தொடங்கி 2023 டிசம்பர் 3 ஆம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசியல் வரைபடத்தில் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது எனலாம்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கணக்குப்படி பா.ஜ.க., இந்தியாவின் நிலப்பரப்பில் 58 சதவீத்த்திலும் 57 சதவீத மக்கள் தொகையையும் ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் 41 சதவீத நிலப்பரப்பிலும் 43 சதவீத மக்கள் தொகையையும் ஆண்டு வருகிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ,க,வின் வெற்றி 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அரசியல் பாதைக்கு வழிவகுத்துள்ளது. பா.ஜ.க.வின் ஹாட்ரிக் வெற்றி இந்தியாவின் சுயசார்பு தன்மை, நல்லாட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படையான செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தென் மாநிலங்களில் தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும், அக்கட்சிக்கு இந்த தேர்தலில் பின்னடைவுதான்.

2014 இல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த நிலையில் ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், கோவா, சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிதான் இருந்த்து. இப்போது 12 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்வது மட்டுமல்ல, நீண்ட காலம் ஆட்சி செய்யும் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, சாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன. என்னொ பொருத்தவரை மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு அதிகாரம், விவசாயிகள் நல்வாழ்வு, ஏழைகளின் முன்னேற்றம் ஆகிய நான்கு முக்கிய அமசங்களைத்தான் வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

 ராஜஸ்தானில் உட்கட்சி பூசலுக்கான விலையை காங்கிரஸ் கொடுத்துள்ளது. அங்கு முதல்வர் அசோக் கெலோட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இருந்தவந்த மோதல் அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த தேர்தலில் இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் மீது காங்கிரஸ் பாராமுகம் காட்டியது தோல்விக்கு வழிவகுத்தது என்று கூறலாம்.

இதையும் படியுங்கள்:
“ஹாட்ஸ் ஆஃப் பிரதமர் மோடி” : ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி
PM Narendra Modi.

இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வின் வெற்றியைவிட காங்கிரஸ் கட்சியின் தோல்விதான் பெரிதாக பேசப்படுகிறது. எனினும் மக்களவைத் தேர்தலில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிபெறும் என்றார்.

இதே நிலை நீடிக்குமானால் மக்களவைத் தேர்தலில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெறுவது கடினம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com