பவானிபூரில் மீண்டும் மம்தாவுடன் மோதும் சுவேந்து அதிகாரி! – 2021 வரலாறு திரும்புமா..?

mamta vs suvendu
mamta vs suvenduimage source:dinamalar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை நிறுத்தி உள்ளது. இது மாநிலத்தில் ஒரு பெரும் போட்டிக்கு வழி வகுத்துள்ளது.

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான 144 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் முதலமைச்சரான மம்தா பானர்ஜியின் தொகுதியான பாபானிபூரில் பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிபூர் தொகுதிகளில் போட்டியிட்டு, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேரடிப் போட்டியை ஏற்படுத்துவார் என்று அறிவித்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரி, அந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

இந்நிலையில்,2021 சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடித்த நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி மீண்டும் போட்டியிடுவார் என்றும், தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்தும் பாபானிப்பூர் தொகுதியிலும் அவரை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் கட்சி தெரிவித்துள்ளது. இது இறுதிவரை நடக்கும் போராட்டமாக இருக்கும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி பாபானிபூரில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராக தேர்வானார். ஆனால் நந்திகிராமில் சுவேந்து அதிகாரி அவரை 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திரிணமுல் காங்கிரசின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படும் நிலையில் பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்பது தெரிந்து விடும். மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் மா.கம்யூ., 192 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
காலம் பதில் சொல்லும் - ஆதவ் அர்ஜூனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை..!
mamta vs suvendu
logo
Kalki Online
kalkionline.com