கங்கை நதியை சுத்தம் செய்யும் புண்ணியம் கிடைக்கணுமா? பிரதமர் மோடியின் ஏலத்தில் கலந்து கொள்ளுங்க மக்களே!

ganga
ganga
Published on

பொதுவாக நமக்கு ஏதாவது பரிசுப் பொருட்கள் வந்தால் அதை பத்திரமாக வைத்திருப்போம். வேறு யாராவது கேட்டால் அவ்வளவுதான். ஏனெனில் அந்த பொருள் நமக்கு பரிசாக வந்தது. அந்த உரிமை காரணமாக யாருக்கும் தராமல்  நாம் பயன்படுத்துவோம். அதிலும் சற்றே விலை உயர்ந்த பரிசு பொருட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இதற்கு என்ன காரணம் என்றால், பரிசுப் பொருள் என்றாலே அது மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடியது. அதனால்தான் அதை பத்திரமாக பாதுகாத்து பார்த்து பார்த்து சந்தோஷம் அடைந்து வருகிறோம்.

ஆனால் அபூர்வமாக ஒரு சிலர், தங்களுக்கு வரும் பரிசு பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்க கூடிய பணத்தை பொதுக் காரியங்களுக்கு செலவிடுவார்கள். இது வெளிநாடுகளில் சகஜமான ஒன்றாகும். நம் நாட்டில் இது போன்ற நல்ல பழக்கங்கள் பெரிய அளவில் வரவில்லை.

இதை போக்கும் விதமாக நமது பிரதமர் மோடி தனக்கு வந்துள்ள பரிசு பொருட்களை ஏலத்தில் விட முடிவு செய்து அதற்கான வெப்சைட்டையும் வெளியிட்டுள்ளார். தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

'பல்வேறு பொது நிகழ்வுகளில் எனக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளை ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். இதில் கிடைக்கும் வருமானம் 'நமாமி கங்கே' முயற்சிக்கு செல்கிறது. இந்த ஆண்டுக்கான ஏலம் தொடங்கிவிட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு சுவாரசியம் தரும் நினைவு பரிசுகளை ஏலத்தில் கலந்து கொண்டு அதை எடுக்குமாறு  உங்களை கேட்டுக்கொள்கிறேன்'

கங்கை நதியை பாதுகாப்பதற்காக 'நமாமி கங்கே' எனும் திட்டம், 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக 20,000 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலம் அவரது பிறந்த நாளான கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இது அக்டோபர் இரண்டாம் தேதி வரை இந்த ஏலம் நடக்கும்.

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராமிலிருந்து பியூட்டி ஃபில்டர்ஸ் நீக்கப்படுவதற்கு காரணம் என்ன?
ganga

pmmementos.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் இந்த ஏலம் நடக்கிறது. பேட்மிட்டன் ராக்கெட், ஷூ, ராமர் கோயில் மாதிரி அங்க வஸ்திரம், குத்துச்சண்டை கையுறை, சிலைகள், விலை உயர்ந்த ஆடைகள், ஓவியங்கள், நீரஜ் சோப்ரா, சுமித் பட்டேல் வழங்கிய ஈட்டி மற்றும் பிரபலங்கள் நன்கொடையாக வழங்கிய பொருட்கள் உட்பட 600க்கும் அதிகமான பொருட்கள் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலம் விலை 600 ரூபாயில் தொடங்கி, 8 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. இதை படிக்கும் வாசகர்கள் தங்களிடம் பணமும், மனதும் இருந்தால் உடனடியாக பிரதமர் மோடியின் ஏலத்தில் கலந்து கொண்டு கங்கை நதி பாதுகாக்க உதவுங்கள். இது நம்மை மட்டும் இல்லாமல் நம் சந்ததிகளையும் காக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com