ஆகஸ்ட் 28-ல் அரிய சந்திரகிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

முழு சந்திர கிரகணத்தின் போது நிலா சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் தோன்றுவதால் 'ரத்த நிலவு' என்று அழைக்கப்படுகிறது.
ரத்த நிலவு
ரத்த நிலவுAI Image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

இந்த வாரம் நடக்கவிருக்கும் அரிய வானியல் நிகழ்வான, 'ரத்த நிலவு' (Blood Moon) என அழைக்கப்படும் பகுதி சந்திர கிரகணம் வரும் 28-ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நிகழ்வின் போது பூமியின் நிழல், சந்திரனை மறைத்து சூரிய ஒளி பூமியின் வளிமண்டலங்களின் வழியே சந்திரன் மீது படுவதால் இது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எனினும் இந்தியாவில் இதனை காண முடியாது என்று வானியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது நிலா சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் தோன்றுவதால் 'ரத்த நிலவு' என்று அழைக்கப்படுகிறது.

முழு சந்திர கிரகணத்தில் சூரியன், பூமி மற்றும் நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் காரணத்தால் பூமி, சூரிய ஒளி நிலாவை நேரடியாக அடைவதைத் தடுக்கிறது. ஆனால் பூமியின் வளிமண்டலம் வழியாகச் செல்லும் சூரிய ஒளியின் ஒரு பகுதி வளைந்து நிலாவை அடைகிறது. மேலும்

வளிமண்டலத்தில் நீலம், பச்சை போன்ற குறுகிய அலைநீள ஒளிகள் அதிகமாகச் சிதறுகின்றன.

இந்த வண்ணங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளி ஒப்பீட்டளவில் அதிகமாக வளிமண்டலத்தை கடந்து நிலாவை அடைகிறது. இதனால் கிரகணத்தின் உச்சத்தில் நிலா செம்மஞ்சள், செங்கல் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்தில் தெரிகிறது என வானியல் ஆய்வு கூறுகிறது.

ஆகவே நிலா உண்மையில் ரத்த நிறமாக மாறுவதில்லை என்பதுடன் பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வடிகட்டி வளைத்து நிலாவுக்கு அனுப்புவதால் அந்த நிறம் தோன்றுகிறது என்பதை அறியலாம். மேலும், வளிமண்டலத்தில் தூசி, புகை, எரிமலைச் சாம்பல் போன்றவை அதிகமாக இருந்தால் சிவப்பு நிறம் இன்னும் அடர்த்தியாகவும் தோன்றலாம் என்று கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 28-ம்தேதி ‘ரத்த நிலா’ என்று அழைக்கப்படும் ஆழமான பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது முழுமையான சந்திர கிரகணம் அல்ல. பூமியின் அடர் நிழலுக்குள் நிலவின் சுமார் 96.3% பகுதி செல்லும். அதனால் இது மிகவும் ஆழமான பகுதி சந்திர கிரகணமாக இருக்கும் என்றாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இதை நேரடியாகப் பார்க்க முடியாது.

கிரகணத்தின் அதிகபட்ச நிலை இந்திய நேரப்படி காலை சுமார் 9:43 – 9:44 மணி வரை. பகுதி கிரகணத்தின் கால அளவு சுமார் 3 மணி 17 நிமிடங்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

நிலவின் பெரும்பகுதி பூமியின் அடர் நிழலுக்குள் செல்லும்போது, பூமியின் வளிமண்டலத்தின் வழியாக வளைந்து வரும் சூரிய ஒளியில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளி நிலவை அடையும். இதனால் நிலவு செம்பு அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றும் என நாசாவும் (NASA)தெளிவுபடுத்துகிறது.

ரத்த நிலா
ரத்த நிலாAI image

இந்தியாவில் பார்க்க முடியாது. காரணம் கிரகணம் உச்சத்தை அடையும் நேரத்தில் இந்தியா பகல் நேரத்தில் இருக்கும்; அந்த நேரத்தில் நிலவு இந்திய வானில் தெரியாது.

NASA-வும் இந்த கிரகணம் அமெரிக்காவில் முழுமையாகவும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் தெரியும் எனக் குறிப்பிடுகிறது.

வெளிநாடுகளில் நிகழவிருக்கும் இந்த கிரகணம் பாதிப்பற்றது என்றும் கிரகணத்தைப் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறது.

மேலும் 2026-ஆம் ஆண்டின் இரத்த நிலவு ஆன்மீக அர்த்தமும் கிரகண ஆற்றலும் கொண்டு உணர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாகச் செயல்படுகிறது; அது நிகழும் இராசிச் சின்னத்தின் கருப்பொருள்களைத் தீவிரப்படுத்துவதால் சந்திர கிரகணங்கள் மறைக்கப்பட்டிருந்தவற்றை வெளிக்கொணரவும், அவசியமான மாற்றத்தை துரிதபடுத்தவும், தீர்க்கப்படாத பழக்கவழக்கங்களை நனவு நிலைக்குக் கொண்டுவரவும் முனைகின்றன. இதன் காரணமாக, இரத்த நிலவு என்பது மனச்சுமையை விடுவிக்கும் பணிகள், சுயபரிசோதனை மற்றும் ஆன்மீக மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கு மிகவும் சக்திவாய்ந்த நேரமாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
2026-ன் முதல் சந்திர கிரகணம்: 10 மணி நேரம் நடை சாத்தப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!
ரத்த நிலவு

பல முழு சந்திர கிரகணங்களைக் கொண்ட சில ஆண்டுகளைப் போலல்லாமல், 2026-ஆம் ஆண்டில் ஒரே ஒரு இரத்த நிலவு மட்டுமே உள்ளது.

இதனால், அதன் ஆற்றல் பல நிகழ்வுகளில் பரவுவதற்குப் பதிலாக, மேலும் செறிவாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் அமைகிறது என விஞ்ஞானம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களிலிருந்து அறியப்படுகிறது.

பகுதி சந்திர கிரகணங்கள் சிந்தனையைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், முழு சந்திர கிரகணத்திற்குரிய தீவிரத்தன்மையோ மாற்றத்திற்கான குறியீட்டுத் தன்மையோ அவற்றுக்கு இருப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
2026-ன் முதல் சந்திர கிரகணம் எப்போது? தேதி மற்றும் துல்லியமான நேர விபரங்கள்!
ரத்த நிலவு

மேலும், இந்த ரத்த நிலவை நம் நாட்டில் காண முடியாது என்பதால், இந்த பகுதி சந்திர கிரகணம் பெரியளவில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை. இருப்பினும், அமெரிக்கர்கள் இணையத்தில் பதிவிடும் ரத்த நிலவுப் படங்களைப் பார்த்து ரசிக்கக் காத்திருப்போம்.

logo
Kalki Online
kalkionline.com