2026-ன் முதல் சந்திர கிரகணம் எப்போது? தேதி மற்றும் துல்லியமான நேர விபரங்கள்!

lunar eclipse
lunar eclipse
Published on

நாளை செவ்வாய்க்கிழமை (03/03/2026) மாலை 04.34 pm மணி முதல் இரவு 06.47pm வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் இலங்கையிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் வரும். சரி சந்திர கிரகணத்தால் ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

கிரகணம் மாலை 4.34 மணிக்கு பிடிக்கின்றதென்றால் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே குளித்து தயாராகி விடுங்கள். பின்னர் இந்த கிரகண நேரத்தில் நாம் என்ன நினைக்கின்றோமோ அதை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். மறக்காமல் ஒரு நோட்டில் கிரகணம் முடியும் வரை ஜெய் ஸ்ரீ ராம் அல்லது, ராமா ராமா அல்லது ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்கள். ஏனென்றால் ராம நாமம் இருக்கும் இடத்தில் அனுமன் இருப்பார். அனுமன் இருக்கும் இடத்தில் நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள் அண்டாது.

கிரஹணத்தின் போது செய்யக் கூடாதவை:

(1) உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(2) பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

(3) நாம் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும்.

(4) குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.

(5) நேரடியாகச் சூரிய கிரஹணத்தைப் பார்வையிடக் கூடாது.

(6) சமைத்த உணவுகளை தர்ப்பை போட்டு மூடி வைக்க வேண்டும்.

(7) கிரஹணத்தின்போது உடலுறவுக் கொள்ளக் கூடாது.

(8) கர்ப்பிணிகள் கிரஹணத்தின்போது வெளியே வந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வெளியே வரக்கூடாது.

(9) கிரஹணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் உணவு அருந்த வேண்டும்.

(10) கிரஹணத்தின் பொழுது கோவிலின் நடை மூடப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
நியோ பெலாஜிக்: கடலின் நடுவே பிளாஸ்டிக் குப்பைகளால் உருவான வினோத உலகம்!
lunar eclipse

கிரஹணத்தின்போது செய்ய வேண்டியவை:

மந்திர சாஸ்திரத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும். அதுவே கிரஹண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம்.

அதனால் இயல்பாக செய்யும் வேலையை விடுத்து, முழுவதுமாக நாம் வணங்கும் சிவ பரம்பொருளை சரணாகதி அடைந்து மந்திர ஜெபம் செய்வது உடனடி பலனை தரும்.

விரைவான மந்திர சித்தி தரும் கிரஹண காலத்தில் மந்திர ஜெபம் - 03-03-2026 செவ்வாய்க்கிழமை மாலை 04.34 மணியிலிருந்து இரவு 06:47 வரை ஜெபம் செய்யலாம்.

சந்திர கிரகணத்தின்போது உங்களுடைய கடன் பிரச்னைகள் தீர செய்யவேண்டிய முக்கியமான தாந்திரீக பரிகாரம் !

தீராத கடன் தொல்லையில் இருப்பவர்கள் ஒரு பேப்பர் எடுத்து நீங்கள் எத்தனை நபர்களுக்கு பணம் தர வேண்டுமோ அவர்களின் பெயரை வரிசை கிரமமாக எழுதி கொள்ளுங்கள். அவரவர் பெயருக்கு நேரே அவருக்கு எவ்வளவு தர வேண்டுமோ அத்த தொகையினை குறிப்பிடுங்கள். அடுத்ததாக அதில் ஒரு ரூபாயை செலுத்தியதாகவும் அடுத்த கட்டத்தில் ஒரு ரூ. கழித்து மீதி உள்ள தொகையை எழுதுங்கள்.

எத்தனை நபர்கள் உள்ளனரோ அத்தனை ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு துண்டு சீட்டில் அவரவர் பெயரை எழுதி அந்த பேப்பரால் ஒரு ரூபாய் நாணயத்தை மடித்து, பின்பு அனைவர் பெயர் எழுதிய சீட்டில் வைத்து மடித்து பூஜை அறையில் வைத்து இவர்களுக்கு நான் தர வேண்டிய கடனை சீக்கிரம் தந்து கடனில் இருந்து விடுபட வேண்டும் என்று அதிஷ்டத்திக்குரிய தேவதைகளிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ளவும். இது கிரகண நேரத்தில் செய்ய வேண்டும். உங்கள் தீராத கடன் தீரும். இது அனுபவ பரிகாரம்.

கிரகணத்தின் பின் செய்ய வேண்டியவை:

கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை செய்வது மிகவும் நல்லது. அதன் பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு வழிபாடு செய்து விட்டு அடுத்த அடுத்த காரியங்களை மேற்கொள்ளலாம்.

அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வாருங்கள். இறை நாமம் ஜெபிப்பது மிகவும் குறிப்பாக நல்லது. மந்திரம் ஜெபிப்பதும் பல ஆயிரமாக பெருகி பலன் தரும். அனுமன் கோயிலுக்கு சென்று நீங்கள் எழுதிய ராம ஜெயம் வைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறந்தது. இப்படி செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டா? அறிவியலும் உண்மையும்!
lunar eclipse

தர்ப்பைப் புல்:

எப்போதும் கிரகண காலத்தில் உணவின் மீதும், குடிக்கும் தண்ணீர், பயன்படுத்தும் நீரின் மீதும் போட்டு வையுங்கள். ஏனெனில் இந்த தர்ப்பை புல் தீய கதிர்வீச்சுகளிலிருந்து நம்மை காக்கக் கூடியது.

ஒரு சிறிய கலனில் நீர் வைத்து அதில் தர்ப்பை புல் போட்டு வையுங்கள். அதனை கிரகணம் முடிந்த பின்னர் உங்கள் வீட்டில் அல்லது அருகில் உள்ள பால் உள்ள மரத்திற்கு (வேப்ப மரம், எருக்கன் செடி) ஊற்றிவிடுங்கள். இப்படி நீங்கள் வழிபாடு செய்தால் உங்கள் கர்ம வினைகளின் பாதிப்பு குறைந்து சீக்கிரம் நினைத்தது கைகூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com