Airplane Bomb Threat
Airplane Bomb Threat

நாடு முழுவதும் ஒரே நாளில் 80 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on

ஏற்கனவே கோடிக்கணக்கில் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வருகிறது.

முதலில் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தொடர்க்கதையாகி வந்தது. இதனையடுத்து சமீபக்காலமாக விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வருகிறது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள், விமான மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இதனால், விமானம் தாமதமாக புறப்படுவது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே இத்தகைய மிரட்டல் விடுவோருக்கு எதிராக, விமானங்களில் பறக்கத்தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு வசதியாக சட்டங்களில் திருத்தம் செய்யவும் பரிசீலித்து வருகிறது. ஆனாலும் இந்த மிரட்டல்கள் தொடர்கதையாகி வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 80க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான தலா 20 விமானங்கள், ஆகசா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 13 விமானங்கள், அலையன்ஸ் ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 5 விமானங்கள் என 80க்கு மேற்பட்ட விமானங்கள் இந்த மிரட்டலுக்கு ஆளாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க அதிபர் தேர்தல் - பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டில் தமிழ் கோலோச்சுகிறது!
Airplane Bomb Threat

இதில் 3 விமானங்கள் சென்னை தொடர்பானவை ஆகும். அந்தவகையில் சிங்கப்பூர்-சென்னை விமானம், சென்னை-பெங்களூரு விமானம், ஜெய்ப்பூர்-சென்னை ஆகிய 3 விமானங்கள் இந்த மிரட்டலுக்கு ஆளாகின.

இதனையடுத்து இந்த அனைத்து விமானங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு முடிவில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இப்படியாக கடந்த 11 நாட்களில் 250க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.

இது புரளி என்றாலும் பீதியை கிளப்புவதால், மக்கள் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com