நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Trisha
Trisha
Updated on

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக கடந்த 20 வருடங்களாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தற்போது புதிய கட்சித் துவங்கி ரசிகர்கள் இடையே பேராதரவு பெற்று வரும் நடிகர் விஜய் உடனான இவரது நட்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையொட்டி டிஜிபி அலுவலகத்தில் இருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல்கள் செல்ல அவர்கள் விரைந்து நடிகை திரிஷாவின் வீட்டுக்கு சென்றனர் .

மோப்ப நாய் உதவிகளுடன் வீட்டை சோதனையிட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்பதை அறிந்தனர். த்ரிஷா வீட்டுக்குள் மட்டுமின்றி பங்களாதேஷ் துணை தூதரகத்திற்க்கும் வெடிகுண்டு மிரட்டல்  மெயில் வந்து அங்கும் காவல்துறை சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.

இரு நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்று புரளி கிளப்பபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். அத்துடன் மெயில் வந்த ஐடி மூலம் அந்த  நபரைக் கண்டறிய சைபர் க்ரைம் மூலம் முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்..!
Trisha
logo
Kalki Online
kalkionline.com