சோகத்தில் மூழ்கிய கேரளா..!மூளையைத் தின்னும் அமீபாவால் 3 மாதக் குழந்தை உட்பட 2 பேர் பலி..!

மூளையை தின்னும் அமீபா
மூளையை தின்னும் அமீபாhttps://tamil.boldsky.com
Published on

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலும் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம் மாவட்டங்களில் இந்த நோய் தொற்றானது பதிவாகியுள்ளது. ஏரி ,ஆறு போன்று அசுத்தமான நீச்சல் குளம், நீர் தேக்கம் என சரியாக பராமரிக்கப்படாத நீர் பாதைகளில் இந்த அமீபா காணப்படும் .

அறிகுறிகள்:

ஒருவரின் மூக்கு வழியாகவே உடலுக்குள் செலும் தன்மை கொண்டது இந்த அமீபா நோய்.மேலும் மூக்கிலிருந்து நேரடியாக மூளையை அடையும். நரம்பு பாதைகளின் வழியாக பயணம் செய்யும் அமீபா, மூளையை அடைந்தவுடன் திசுக்களை உணவாக தின்று அளிக்க தொடங்குகிறது. சுத்தமில்லாத தண்ணீர் மூக்கு வழியாக சென்ற 9 நாட்களுக்குள் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. அமீபா நோய் பாதிப்பால் மூளையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு, மூளை காய்ச்சல் உருவாகும் .அதன் பின் கடுமையான தலைவலி ,குமட்டல், வாந்தி, வலிப்பு உள்ளிட்ட அடுக்கடுக்கான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நோய் பாதித்தவர் கோமா நிலையை அடையலாம் . இறுதியான உயிரிழப்பு ஏற்படுகிறது.

அண்மையில் இந்த நோய்க்கு கேரளாவில் ஒன்பது வயது சிறுமி பலியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அமீபா பாதிப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கேரளாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓமசேரியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் மகனான 3 மாத குழந்தை, ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.அதேபோல 52 வயது ரம்லாவுக்கு, ஜூலை 8 ஆம் தேதி மூளையை தின்னும் அமீபா பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்:
மூளையை உண்ணும் அமீபா நோய்யில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி?
மூளையை தின்னும் அமீபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com