
Brain Eating Amoeba - (Naegleria fowleri) என்றால் என்ன? இது ஒரு சிறிய ஒரு செல்ல உயிரி (amoeba). விஞ்ஞான பெயர் Naegleria fowleri. சுத்தம் செய்யப்படாத நீரில் அதாவது ஏரி, குட்டை, நீச்சல் குளம், போர்வெல் போன்ற இடங்களில் வாழ்கிறது.
மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்தால், நேராக மூளைக்கு சென்று Primary Amoebic Meningoencephalitis (PAM) என்ற ஆபத்தான நோயை உண்டாக்கும். மிகவும் அரிதானது. ஆனால் மிகக் கொடியது.
இதன் அறிகுறிகள் (நுழைந்த 1–12 நாளில்) கடுமையான தலைவலி காய்ச்சல், வாந்தி, மயக்கம், கழுத்து இறுக்கம் மனச்சிதைவு, Fits (seizures) சில நாட்களிலேயே கோமா, மரணம் ஏற்பட வாய்ப்பு.
இது எப்படி பரவுகிறது?
நீந்தும் போது அல்லது குளிக்கும் போது, அழுக்கு சூடான நீர் மூக்கில் புகுந்தால் மட்டுமே பரவும். குடிப்பதால் பரவாது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
இதனை எப்படி தடுப்பது?
1. சுத்தமான, குளிர்ந்த நீரில் நீந்தவும்.
2. சிகிச்சை செய்யப்பட்ட (chlorinated) swimming pool-களை மட்டும் பயன்படுத்தவும்.
3. ஏரி/பெருக்கு நீர், borewell நீரில் மூழ்காமல் இருக்கவும்.
4. மூக்கில் தண்ணீர் புகாதபடி nose clip அணியவும்.
5. வீட்டு drinking water tanks-ஐ சுத்தம் செய்து, chlorine சேர்த்து பராமரிக்கவும்.
6. காய்ச்சல், தலைவலி, மயக்கம் வந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
இது மிக அரிதாக வரும் நோய். ஆனால், ஒருமுறை தாக்கினால் உயிருக்கு ஆபத்து. ஆகவே, முன்னெச்சரிக்கை தான் மிக முக்கியம். சமீபத்தில் கேரளாவில் இந்த நோய் வந்து 9 வயது பெண் இறந்து போயிருக்கிறார். அமெரிக்காவிலும் 26 மாத குழந்தை இந்த வியாதியால் இறந்து போய் உள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)