#BREAKING: மீண்டும் ஒரு சோகம்: விபத்தில் சிக்கிய விஜய் ரசிகர்கள்.! மூடப்பட்டது பேருந்து நிலையம்.!

Vijay Campaign Karaikudi
Vijay Campaign
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தவெக தலைவய் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொள்ள சென்னையிலிருந்து காலை புறப்பட்டார். தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் விபத்துக்குள்ளாவது தொடரும் நிலையில், இன்று மீண்டும் மற்றொரு விபத்து நடந்துள்ளது. மதுரையில் இருந்து காரைக்குடி வரை சாலை மார்க்கமாக விஜய் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை பின் தொடந்த ரசிகர் விபத்தில் சிக்கினார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்..! அதிர்ச்சியில் படக்குழு.!
Vijay Campaign Karaikudi

சென்னையில் இருந்து விஜய் புறப்பட்டபோது, ரசிகர்கள் யாரும் அவருடைய வாகனத்தை பின் தொடராமல் இருக்க போலீசார் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் மதுரையில் விபத்து ஏற்பட்டு இருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் இன்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை விஜய் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக காரைக்குடி புதிய பேருந்து நிலையம் தகர சீட்டுகளால் மூடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் பழைய பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பொதுமக்களே உஷார்.!இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும்.!
Vijay Campaign Karaikudi
logo
Kalki Online
kalkionline.com