

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் இப்படத்தை தேர்தல் அதிகாரிகளும் பார்க்க வேண்டும் என தணிக்கை குழு பரிந்துரை செய்தது.
ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் நேற்று இணையத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது மூன்று மணிநேர முழு படமும் இணையத்தில் வெளியாகி இருப்பதால் படக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜனநாயகன் திரைப்படம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக திரைக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் முடிந்த பிறகு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
தேர்தல் முடிந்த பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது என்பதால், படத்தின் வெளியீட்டை மே மாதத்திற்கு திட்டமிட்டது தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் இணையத்தில் நேற்று வெளியானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முழு படமும் இன்று இணையத்தில் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இநஅத சம்பவத்தால் படக்குழு மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.