#BREAKING: நீட் மறு தேர்வு..! தேதியை அறிவித்தது NTA.!

நீட் தேர்வு
நீட் தேர்வு
Updated on

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது. இதனை அடுத்து தேசிய தேர்வு முகமை (NTA), அது போலியான வினாத்தாள் எனவும், இதனை மாணவர்கள் பயன்படுத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தேர்வு முடிந்த பிறகு நீட் வினாத்தாள் கசிந்து விட்டது என தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததாக பரபரப்பான புகார்கள் முன்வைக்கப்பட்டன.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக திமுக தலைவர் நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட் தேர்வே ஒரு ஸ்கேம் தான் என பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். மேலும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மறு தேர்வு நடத்துவதற்கான உத்தரவை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தேர்வுக்கு முன்பாக நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்வையிடலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கம் முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை: மத்திய அரசின் அதிரடி முடிவுகளும், பொதுமக்களின் தவிப்பும்.!
நீட் தேர்வு

மறு தேர்வு மாணவர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீட் வினாத்தாள் வெளியான தற்போதைய சூழலில், மறு தேர்வு கட்டாயமான ஒன்றாகும். அப்போதுதான் தகுதியான மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பில் சேர முடியும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை: மத்திய அரசின் அதிரடி முடிவுகளும், பொதுமக்களின் தவிப்பும்.!
நீட் தேர்வு
logo
Kalki Online
kalkionline.com