#BREAKING: மோடி - இபிஎஸ் மெகா ரோடு ஷோ.! தென்னகத்தில் அதிரும் அரசியல் களம்!

Modi - EPS
Road Show
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் என்டிஏ கூட்டணி சார்பாக, இன்று பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். நாகர்கோயிலில் உள்ள வேப்பமூடு பகுதியில் மாலை 4:30 மணிக்கு 1.5 கிலோ மீட்டர் வரையிலான ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க பிரதமர் மோடி ரோடு ஷோவை மேற்கொள்கிறார். பிரதமரின் இந்த ரோடு ஷோவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பெரும் தலைவர்கள் ரோடு ஷோவில் இணைந்து பிரச்சாரம் செய்ய இருப்பதால், கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமெரிக்கா - ஈரான் போர்.! மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் டிரம்ப்..?
Modi - EPS

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் இன்று கரூர் மற்றும் திருப்பூரில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

பிரச்சாரத்தை முடித்த கையோடு, மாலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிரதமருடன் இணைந்து ரோடு ஷோவில் பங்கேற்க இருக்கிறார் இபிஎஸ்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: வீடு தேடி வரும் பூத் ஸ்லிப்! தேர்தல் ஆணையத்தின் மெகா அப்டேட்.!
Modi - EPS
logo
Kalki Online
kalkionline.com