#JUST IN: வீடு தேடி வரும் பூத் ஸ்லிப்! தேர்தல் ஆணையத்தின் மெகா அப்டேட்.!

booth slip
booth slip
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் பூத் ஸ்லிப்புகளை வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 17-ம் தேதிக்குள் பூத் ஸ்லிப் வழங்கும் பணி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க வீடு வீடாக வாக்களார்களுக்கு பூத் ஸ்லிப்புகளை வழங்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: ஆன்லைன் மோசடிக்கு செக்: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது.!
booth slip

இறுதி வாக்காளர் படிவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமாக 5.73 கோடி தகுதியான வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் நடைபெறவிருக்கும் 17-வது சட்டமன்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க உதவும் பூத் ஸ்லிப்புகள் தற்போது தயாராக உள்ளன.

தேர்தல் நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வீடு வீடாக பூத் ஸ்லிப்புகள் வழங்கப்படும் எனவும், ஏப்ரல் 17-க்குள் இப்பணிகள் முடிவடையும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்குவதால், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது பூத் ஸ்லிப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
booth slip
logo
Kalki Online
kalkionline.com