#BREAKING: கட்சி அறிவிக்கும் முன்பே மனுத் தாக்கல்: பாஜக நிர்வாகி அதிரடி நீக்கம்.!

2026 election
Nayinar Nagendran
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தொடங்கியது. ஆனால், இன்று வரை காங்கிரஸ் மற்றும்ம் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரன் சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

கட்சி கட்டுப்பாடுகளை மீறி வேட்பு மனுத் தாக்கல் செய்ததால், அவரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணியில், 27 இடங்களில் போட்டியிடுகிறது பாஜக. இன்னும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்றுவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகாத சூழலில் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியை கேட்பதால், வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரன், சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிடாத சூழலில், வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் முரளிதரன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியுள்ளார். இதன் காரணமாக அவரைக் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : இனி சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை கிடையாது.! ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்.!
2026 election
logo
Kalki Online
kalkionline.com