#BREAKING : இனி சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை கிடையாது.! ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்.!

Civil Laws
India parliment
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இந்தியாவில் சிறு குற்றங்களுக்கு கூட சிறை தண்டனை வழங்கும் காலாவதியான பல சட்டங்கள் உள்ளன. இதனை சீர்திருத்தும் நோக்கத்தோடு, நாடாளுமன்றத்தில் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனையின்றி அபராதம் மட்டுமே விதிக்கப்படும் ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத் திருத்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி சிறு குற்றங்கள் அனைத்தும் குற்றமற்றதாகவே கருதப்படும். மேலும் தற்போது நீதிமன்ற வழக்கில் உள்ள சுமார் 717 சிறு குற்றங்களை குற்றம் அற்றதாக கருதி, அவற்றை குற்றவியல் பிரிவிலிருந்து நீக்கி அபராதம் அல்லது எச்சரிக்கை விடுக்கும் சிவில் விதிமீறல்களாக இந்த சட்டம் மாற்றியுள்ளது

இதையும் படியுங்கள்:
#JUST IN: ஏப்ரல் 5 முதல்... கடற்கரை டூ செங்கல்பட்டு ரயில் சேவையில் முக்கிய மாற்றம்.!
Civil Laws

பல ஆண்டுகளாக காலாவதியான சட்டங்களின் கீழ், மிகச் சிறிய குற்றங்களுக்கு கூட சிறை தண்டனை விதிக்கும் சூழல் நிலவி வந்தது. இதன் மூலம் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தது மட்டுமின்றி தொழில்முனைவோர்களுக்கு ஒரு பயத்தையும் கொடுத்தது.

இந்நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத் திருத்த மசோதாவின் மூலம், இனி சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட மாட்டாது. இதன் மூலம் நீதிமன்றங்களின் பணிச்சுமை குறைவதோடு, சிறைச்சாலைகளில் நெரிசல் குறையும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசு மற்றும் குடிமக்களுக்கு இடையே ஒரு நம்பிக்கையான சூழல் உருவாகும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தென் மாவட்டங்களில் விஜய்.. களத்தில் இறங்கிய செங்கோட்டையன்.! வெளியானது முக்கிய தகவல்.!
Civil Laws
logo
Kalki Online
kalkionline.com