#BREAKING: விஜய் வருகையால் ‘வெயிட்டிங்’ லிஸ்டில் உதயநிதி: தள்ளிப்போனது பரப்புரை.!

Vijay vs Udhayanidhi
Vijay Campaign
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

கடலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த சூழலில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 11) பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையத்திலும் தவெக நிர்வாகிகள் அனுமதி கோரினர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நாளை கடலூரில் நான்கு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.

கடலூரில் விஜய் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கும் சூழலில், துணை முதல்வர் உதயநிதியின் பரப்புரை தள்ளிப் போயுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பொதுமக்களே உஷார்.!இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும்.!
Vijay vs Udhayanidhi

உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தின் வடலூரில் நாளை பரப்புரையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கிறார். ஆனால் நாளை விஜய் வடலூர் உள்பட கடலூர் மாவட்டத்தின் 4 இடங்களில் பரப்புரையை மேற்கொள்ள இருப்பதால், உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முதலில் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்டதால், உதயநிதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக நாளை மறுதினம் (ஏப்ரல் 12) உதயநிதி ஸ்டாலினை பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை கடலூரில் உள்ள வடலூரில் பரப்புரையை மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்..! அதிர்ச்சியில் படக்குழு.!
Vijay vs Udhayanidhi
logo
Kalki Online
kalkionline.com