.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்தியாவின் அரசுக்கு சொந்தமான தொலை தொடர்பு சேவை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முழுமையான உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை தொடங்கி வைத்தார்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்க தொடங்கியதில் இருந்து, அந்த நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டங்கள் பெஸ்ட் ரீசார்ஜ்களாக மாறி இருக்கின்றன. ஏனென்றால், பழைய விலைகளிலேயே 4ஜி திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் ரூ.2399 ரீசார்ஜ் திட்டம், மாதத்துக்கு ரூ.200 செலவில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் கொடுக்கிறது.
தற்போது இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ரீசார்ஜ் திட்டங்களையும், டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்த நிறுனங்களின் புதுப்புது சலுகைகளால் கவரப்பட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோ, ஏர்டெல் போன்ற சேவைகளுக்கு மாறினர். இத்தகைய சூழ்நிலையில் சமீப காலமாக ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க புது புது சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் புதிய வாடிக்கையாளர்களையும், தனது பழைய வாடிக்கையாளர்களையும் மீண்டும் ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு ஒரு புதிய ஆஃபரை அறிமுகம் செய்திருக்கிறது.
அந்த வகையில், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு ரூபாய் செலுத்தி பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், ஒரு மாதத்துக்கு தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் ஆகிய சேவைகளை இலசவமாக வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இந்த இலவசமாக 4ஜி சேவை அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் எங்கெல்லாம் 4ஜி சேவைகள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அன்லிமிடெட் 4ஜி சேவைகளை அவர்களால் பெற முடியும். இந்தச் சலுகை, முதல் 30 நாள்களுக்கும், பின்னர் விருப்பப்பட்ட எந்த ரீசார்ஜ் திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் உடன் இணையக்கூடிய புதிய வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக 4ஜி சேவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது.
இதேபோல் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு சலுகையை அறிவித்த நிலையில் 1.38 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-லில் இணைந்தனர். இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் ஜியோவிற்கு அடுத்ததாக அதிகமான புதிய வாடிக்கையாளர்களை பெற்று பிஎஸ்என்எல் 2-வது இடத்தை பிடித்ததுடன், 2-வது இடத்தில் இருந்த ஏர்டெல்லை 3-வது இடத்திற்கு தள்ளியது.