.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நிறுவனம் : Bharat Sanchar Nigam Limited (BSNL)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 120
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 05.02.2026
கடைசி நாள் : 07.03.2026
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Senior Executive Trainee – 120 காலியிடங்கள்
பணியின் விவரங்கள் :
பதவியின் பிரிவு எண்ணிக்கை
டெலிகாம் ஆப்ரேஷன் 95
நிதி 25
மொத்தம் 120
இப்பணியிடங்கள் பொதுப்பிரிவு - 16, எஸ்டி - 8, ஒபிசி - 31, பொதுப்பிரிவு பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் - 51, மாற்றுத்திறனாளிகள் - 5 என நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி :
டெலிகாம் ஆப்ரேஷன் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல்/ தொழில்நுட்பம் (BE/B.Tech) பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண்கள் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எலெக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் இன்ரூமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் (அல்லது) இதனுடன் கூடிய வளர்ந்து வரும் தொழில்நுட்பப் படிப்புகளை இணைந்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நிதி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA), செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் (CMA) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
பிஎஸ்என்எல் நிறுவனம் Senior Executive Trainee பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
சம்பள விவரங்கள் :
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Senior Executive Trainee பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக Rs.24,900 – 50,500/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
BSNL நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Circle Based Officers பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
Online Exam
Document Verification
விண்ணப்பக் கட்டணம் :
ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு : Rs.1250/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.2500/-
கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 05.02.2026
ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 07.03.2026
எப்படி விண்ணப்பிப்பது :
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.02.2026 முதல் 07.03.2026 தேதிக்குள் https://bsnl.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.