BTS குழுவினரின் 'Take Two' என்ற புதிய பாடல் வெளியீடு.

BTS  குழுவினரின் 'Take Two' என்ற புதிய பாடல் வெளியீடு.

சுமார் ஓராண்டுக்குப் பிறகு BTS குழுவின் புதிய பாடல் ஒன்று வெளிவந்திருக்கிறது. இது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

BTS Army நீங்கள் தயாரா? BTS குழுவின் Take Two என்ற பாடல் இறுதியாக வெளிவந்து விட்டது. இந்தக் குழுவினர் ஒன்றாக இணைந்து ஆல்பம் வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அவர்களின் கடைசி ஆல்பமான ப்ரூஃப், கடந்த 2022 ஜூன் 10ஆம் தேதி வெளிவந்தது. அதன் பிறகு இந்த இசைக் குழுவினர் நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவு செய்தனர். அதன் பிறகு இந்த BTS குழுவினரை ஒன்றாகப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்தனர். தற்போது இவர்களின் கனவு BTS குழுவின் புதிய பாடலான 'டேக் டு' வெளியிடப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளது. 

ஒரு இசைக்குழுவாக தங்களின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், BTS குழுவின் பிக்ஹிட் மியூசிக், புதிய பாடலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது. இதற்கு முன்னதாகவே இந்த பாடல் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது வெளிவந்திருக்கும் Take Two என்ற புதிய பாடலில் BTS குழுவில் இருக்கும் ஏழு உறுப்பினர்களுமே பங்கேற்றுள்ளனர். BTS ஆர்மி எனப்படும் இவர்களின் ரசிகர்கள் பொழியும் அனைத்து அன்பிற்கும், இக்குழுவில் இருப்பவர்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற அவர்களின் விருப்பத்திற்கும் பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாக இந்த பாடல் வெளிவந்துள்ளது. 

இந்த பாடலின் தலைப்பானது ஒரு கொரிய பாப் இசைக் குழுவானது, ஒரு சகாப்த கால பயணத்திற்குப் பிறகு, BTS குழு அதன் இரண்டாவது அத்தியாயத்தில் அடி எடுத்து வைப்பதை நினைவுபடுத்துகிறது. இந்த பாடலின் ஒட்டுமொத்த தயாரிப்பில் BTS உறுப்பினர்கள் அனைவருமே பணியாற்றியுள்ளனர். 

எனவே இந்த ஆண்டு BTS குழுவினரின் ரசிகர் பட்டாளம், அவர்களின் பாடல்களை ஆரவாரமாகக் கொண்டாடு வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இவர்கள் ஓய்வில் இருக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த BTS Army, தங்களின் சோகத்தை வெளிப் படுத்தியது. இந்த ஆண்டு அவர்களுடைய புதிய பாடல் மீண்டும் களத்திற்கு வந்திருப்பதால், இவர்களின் கொண்டாட்டங்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய பாடல் வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு பெரிய விஷயம்தான் என்றாலும், இந்த ஆண்டு அவர்களுக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அதாவது இந்த ஜூன் மாதத்திலேயே BTS குழுவினரின் இரண்டு ஆவணப் படங்கள் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இது BTS ரசிகர்களை உச்சபட்ச மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com