ஏற்காடில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி!

Bus Accident
Bus Accident

சேலம் ஏற்காடு பகுதியில் தனியார் பஸ் ஒன்றுக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்தில் ஏறத்தாழ 70 பேர் பயணம் செய்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடை விடுமுறை ஆரம்பமானதிலிருந்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்தவகையில், ஏற்காடுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றனர். இதன்காரணமாக, சேலத்திலிருந்து ஏற்காடுக்கு தனியார் பஸ் ஒன்று சென்று வருகிறது. அந்தவகையில் நேற்று மாலை 5:30 மணியளவில் ஒரு பேருந்து அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, மலைப்பாதையின் 13வது ஊசி வளைவுப் பகுதியில் பேருந்து திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததிற்கு காரணம் பேருந்தின் அச்சு முறிந்ததுதான் என்று கூறப்படுகிறது. 13வது ஊசி வளைவிலிருந்து 80 அடி கீழ் 11 வது ஊசி வளைவில் வந்து விழுந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உட்பட 4 பேர் இறந்துள்ளனர். திருச்செங்கோட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மூனீஸ்வரன், சேலத்தை சேர்ந்த கார்த்தி, ஹரிராம், மாது ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணித்த மற்ற 66 பேர் மிக மோசமாக காயமடைந்தனர். இதனையடுத்து, அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஏற்காடு போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிலரை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
ஆல்மண்ட் ஆயிலில் இருக்கும் அற்புதமான 10 ஆரோக்கிய நன்மைகள்!
Bus Accident

காயமடைந்த அனைவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 பேரில் 40 பேர் காயம் அடைந்தனார். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 2 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆகையால், தற்போது வரை அந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சேலம் மருத்துவமனை டீன், “மீதமுள்ள 60 பேர் அபாய நிலையிலிருந்து மீண்டனர். ஒருவர் மட்டும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். 8 பேர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com