திடீர் ஸ்டிரைக் பேருந்துகள் நிறுத்தம் : பொதுமக்கள் அவதி !

திடீர் ஸ்டிரைக் பேருந்துகள் நிறுத்தம் : பொதுமக்கள் அவதி !

தனியார் மய நடவடிக்கையை கண்டித்து மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இந்த திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.ஏராளமானோர் போக்குவரத்துக்காக மாநகர பேருந்துகளை நாள்தோறும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த திடீர் ஸ்டிரைக்கால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையின் முக்கிய இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பணிகள் முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது . சென்னை, கும்பகோணம், திருச்சி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது.

சென்னையில் மட்டும் அண்ணா நகர், பல்லவன் சாலை, கோயம்பேடு பணிமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பணிமனையிலும் 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கபட இருந்த நிலையில், அரசு அங்கிகரிக்கப்பட ஏஜென்சிகள் ஒப்பந்த்தை கோரலாம் என போக்குவரத்துதுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இந்த திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஓட்டுநர், நடத்துநர்களை தனியார் மூலம் நியமிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.நகர், மந்தைவெளி, ஆவடி உள்ளிட்ட பேருந்து பணிமனைகளுக்கு பேருந்துகள் ஓடாமல் திரும்பி வந்து விட்டது. . வாரத்தின் முதல் நாளான இன்று, அதுவும் அலுவலகம் சென்ற மக்கள் திரும்பி வரும் வேளையில் இந்த போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் ஆட்டோக்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ஆட்டோ, கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, கேப் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் விதிகளுக்கு உட்பட்டு கட்டணங்களை வசூலிக்குமாறு சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com