#BIG BREAKING: இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு..!

சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் - 2026 மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளர்கள் - கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
திமுக
DMK
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வியூகத்தை அதிமுக மற்றும் தவெக அமைத்து வரும் நிலையில் திமுக மட்டும் மௌனம் காத்து வருகிறது. இந்நிலையில் சற்று முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் கனிமொழி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இரண்டு மாவட்ட இரண்டு தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பணி குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை அல்லது நாளை மறுதினம் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, கூட்டணி கட்சிகளின் விலகல் மற்றும் தவெக-வின் வெற்றியைத் தடுப்பது உள்ளிட்ட 3 முக்கிய காரணங்களைக் கருத்தில் கொண்டு திமுக இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு; "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) அவர்களும்; 

தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்., அவர்களும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
"ஆபத்து.. உடனே நிறுத்துங்க.!" – தமிழக அரசுக்கு அன்புமணி விடுத்த பகீர் எச்சரிக்கை!
திமுக

இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தவெக இடையே கடும் போட்டி நிலவும். ஏற்கனவே இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், மீண்டும் இந்த தொகுதிகளை தங்கள் வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த இரண்டு தொகுதிகளையும் தங்கள் வசம் கொண்டு வர தவெக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக செங்கோட்டையன் தலைமையில் ஒரு அமைச்சர் குழுவும், ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஒரு அமைச்சர் குழுவும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com