#BREAKING: இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது தவெக.! மாஜி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு.!

சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் தவெகவின் வேட்பாளர் தேர்வு.!
தவெக வேட்பாளர்கள்
By Election
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக தான் வென்றிருந்தது. இருப்பினும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் தவெக வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சற்றுமுன் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது தவெக.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார். அதோபோல் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார்.

தேர்தல் பணிகளை கவனிக்க அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஒரு குழுவும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஒரு குழுவையும் தவெக தலைமை அமைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
"ஆபத்து.. உடனே நிறுத்துங்க.!" – தமிழக அரசுக்கு அன்புமணி விடுத்த பகீர் எச்சரிக்கை!
தவெக வேட்பாளர்கள்

இடைத்தேர்தலில் வெற்றியை ஈட்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட சில கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மறுபுறம் திமுக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சௌமியாவும் போட்டியிடுகின்றனர்.

இரண்டு தொகுதிகளிலும் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டு வருகிறது. தவெக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

மக்கள் தெரியாமல் தவெக-வுக்கு வாக்களித்து விட்டனர் என திமுகவும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என அதிமுகவும் குற்றம் சாட்டி வரும் நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அனைத்துக் கட்சிகளுககும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING: இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு..!
தவெக வேட்பாளர்கள்

பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏற்கனவே முதல்வர் விஜய்க்கே நல்ல வரவேற்பு இருக்கும் சூழலில் தவெக-க்கு வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் ஏற்கனவே இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வென்றிருப்பதால் கடும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com