குட் நியூஸ்..! அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி(DA) உயர்வு..!

அகவிலைப்படி
அகவிலைப்படி
Updated on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ(DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர்(DR) ஆகியவற்றை 2% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த டிஏ அதிகரிப்பானது ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும்.

8வது ஊதியக் குழுவின் கூட்டத்திற்கு முன்னதாக ஊதிய கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், 2% டிஏ உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தை சமன் செய்வதையும், அதிகரித்து வரும் செலவுகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த உயர்வின் மூலம், அடிப்படை ஊதியம்/ ஓய்வூதியத்தில் 58% லிருந்து 60% ஆக உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு சிறியதாக இருந்தாலும், இது மாத வருமானத்தை சிறிதளவு உயர்த்துவதன் மூலம் ஓரளவு நிவாரணம் அளிக்கும்.

DAவானது பணவீக்கத்துடன் தொடர்புடையது மற்றும் ஆண்டுக்கு இருமுறை வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்படுகிறது. இந்த முறை அறிவிப்பு சற்று தாமதமானது. DA என்பது அரசு சம்பளங்களின் ஒரு முக்கிய பகுதியாகும். உயர்ந்து வரும் விலைகளை சமாளிக்க ஊழியர்களுக்கு உதவும் வகையில் இது தொடர்ந்து திருத்தி அமைக்கப்படுகிறது. 2% DA உயர்வு ஒரு குறுகிய கால ஊக்கத்தை அளித்தாலும், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால் பெரிய மாற்றங்கள் வரக்கூடும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : காசோலை போல துண்டுப் பிரசுரம்... அதிமுகவிற்கு எதிராக வழக்கு..!
அகவிலைப்படி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com