வாங்க தெரிஞ்சிக்கலாம்..! 9 காரட் நகைகளை மறுவிற்பனை செய்ய முடியுமா?

சந்தைக்கு வரத்தொடங்கி உள்ள 9 காரட் தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா, அதை மறுவிற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் அதற்கு விடை கிடைத்துள்ளது.
9 carat gold jewellery
9 carat gold jewellery
Published on

சென்னையில் கடந்தாண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் ரூ.59,000க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 24-ம்தேதி) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,600-க்கும் ஒரு சவரன் ரூ.84,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

தங்கத்தின் விலை தாறுமாறாக விலை ஏறிவரும் நிலையில் சாமானிய மக்களின் பார்வை 9 காரட் தங்கத்தின் பக்கம் சென்றுள்ளது.

இந்த 9 காரட் நகைகளை ஏழை, நடுத்தர மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஹால்மார்க் முத்திரை கொடுக்கப்படுகிறது. 9 காரட் தங்க நகை ஒரு சவரன் ரூ 32,000 என்பது சிறப்பு அம்சமாக கருதப்பட்டாலும் இதற்கும் மற்ற 22 காரட் நகைகளை போன்ற செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் உண்டு.

இதையும் படியுங்கள்:
‘வந்தாச்சு 9 காரட் தங்கம்’...பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்...விலை எவ்வளவு தெரியுமா?
9 carat gold jewellery

9 காரட் தங்கத்தில் 37.5% மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5%ல் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதாவது 9 கேரட் தங்கத்தில் 1000 கிராமில் 375 மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும். 9 காரட் தங்கத்தில் தூய தங்கம் 37.5% மட்டுமே உள்ளதால் 18 காரட், 22 காரட் தங்கத்தை விட இதன் விலை மிகவும் குறைவு.

தங்கத்தின் விலை அதிகரித்துகொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் மற்றும் தங்கம் வாங்க ஆசைப்படுபவர்கள் 9 காரட் தங்க நகைகளை வாங்குவதற்கும் அதில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் 24 காரட் தங்கத்துடன் ஒப்பிடுகையில், 9 காரட் தங்கத்தின் விலையும் குறைவு, இதை வடிவமைப்பதும் எளிதும். எனவே குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

தற்போது 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தொட்ட நிலையில் 9 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,000க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில், 9 காரட் தங்கத்தை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினாலும் அதில் தூய தங்கம் 37.5% மட்டுமே உள்ளதால் கடைகளில் மறுவிற்பனை செய்ய முடியுமா என சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் சந்தைக்கு வரத்தொடங்கி உள்ள 9 காரட் தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா, அதை மறுவிற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் அதற்கு விடை கிடைத்துள்ளது.

இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) இப்போது 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் நீங்கள் 9 காரட் தங்க நகைகளை மறுவிற்பனை செய்யும் போது அதில் உள்ள தங்கத்திற்கு நிச்சயம் மதிப்பு உண்டு என்றும் மறுவிற்பனை செய்யலாம் என நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளுக்கு அவற்றின் தங்க மதிப்புக்கு ஏற்ப நிச்சயமாக மதிப்பு உண்டு, என்பதால் அவற்றை விற்கலாம் அல்லது அடகு வைக்கலாம்.

இதுகுறித்து நகைக் கடை விற்பனையாளர்கள் கூறுகையில், 9 காரட் தங்க நகைகள் தற்போது விற்பனைக்கு வரும் நிலையில் அதை மறு விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து பலருக்கும் தயக்கம் ஏற்படுகிறது. இந்த நகைகளை வாங்க யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
என்னது? தங்கத்தில் புதிய கூட்டணியா? 9 காரட் தங்கமா?
9 carat gold jewellery

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் மக்களின் தங்கம் வாங்கும் ஆர்வத்திற்கு 9 காரட் தங்கம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com