‘காற்றில் பறந்த மனிதாபிமானம்’: மும்பையில் பேரனால் குப்பையில் கைவிடப்பட்ட மூதாட்டி!

ஆரேகாலனியில் குப்பை கிடங்கு பகுதியில் மூதாட்டி மீட்கப்பட்டார். குடும்பத்தினர் அவரை அங்கு விட்டு சென்றனரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘காற்றில் பறந்த மனிதாபிமானம்’: மும்பையில் பேரனால் குப்பையில் கைவிடப்பட்ட மூதாட்டி!
woman abandoned in garbage
Published on

கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் அதெல்லாம் இப்போ மலையேறி பேச்சு. சமீபகாலமாக மேலைநாட்டு கலாச்சாரத்தை பின்பற்றும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதாவது நமது கலாசாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டை பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம். பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலை, மாறிவரும் பழக்கவழக்கங்கள், மேலைநாட்டு மோகம் போன்றவற்றில் இன்றைய இளைஞர்கள் மூழ்கிவிட்டனர்.

இந்த இடத்தில் முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது என்று சொல்வதை விட மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் குடும்பத்தினரால் தற்போது சுமையாகவோ, செலவாகவோ, வேண்டப்படாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

இந்த பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. வயதானவர்களை பாரமாக கருதும் குடும்பத்தினர் அவர்களை அடித்து துன்புறுத்துதல், கிள்ளுதல், கை, கால்களை முறுக்கி துன்புறுத்தும், உணவு தராமல் கொடுமைப் படுத்துதல், தேவையான மருத்துவசிகிச்சையை புறக்கணித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க முதியவர்கள்தான் காரணமா? உண்மை என்ன?
‘காற்றில் பறந்த மனிதாபிமானம்’: மும்பையில் பேரனால் குப்பையில் கைவிடப்பட்ட மூதாட்டி!

ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் வயதானவர்களுக்கு குடும்பத்தினரால் கொடுமை நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு கொடூரமான அனைவரது நெஞ்சையும் கிழிக்கும் சம்பவம் தான் மும்பையில் தற்போது நடந்துள்ளது.

மும்பை ஆரேகாலனி பகுதியில் உள்ள குப்பைக் குவியலில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் பேச திறனின்றி கிடந்தார். அந்த மூதாட்டி பலவீனமான நிலையில் நகரவோ அல்லது உதவிக்கு அழைக்கவோ கூட முடியாமல் சிரமப்பட்டார். அந்த வழியாக சென்றவர்கள் மூதாட்டி குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் மூதாட்டியின் படத்தை எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பினர்.

இதற்கிடையே மூதாட்டியிடம் விசாரித்த போது தனது பேரன் தன்னை அங்கே வீசிவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை கூறினார். இந்த செயல் இந்தியாவில் நகரங்களில் முதியோர்கள் எந்தளவு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கொடூரமான யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தநிலையில் சமூகவலைதளத்தில் பரவிய படங்கள் மூலம் மூதாட்டி காந்திவிலி பொய்சர் பகுதியை சேர்ந்த யசோதா கெய்க்வாட் என்பது தெரியவந்தது.

யசோதா கெய்க்வாட் சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயின் முற்றிய நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவளிடம் எந்த உடைமைகளும் இல்லை. மேலும் அவரிடம் விசாரித்த போது அவர் இரண்டு முகவரிகளை போலீசாரிடம் கூறினார். எனினும் அவர் கூறிய வீட்டு முகவரிக்கு சென்று பார்த்த போது, அங்கு மூதாட்டியின் குடும்பத்தினர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.

யசோதா கெய்க்வாட்டின் வழக்கு, முதியோர் துஷ்பிரயோகம் மற்றும் கைவிடப்பட்டதை கடுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. புற்றுநோயால் போராடும் ஒரு மூதாட்டி தனது சொந்த இரத்தத்தால் குப்பையில் வீசப்பட்டிருப்பது என்பது, நவீன சமூகத்தின் பொறுப்பற்ற, சுயநலமான போக்கை படம் பிடித்து காட்டுகிறது.

போலீசார் காலையிலேயே யசோதா கெய்க்வாட் மீட்டபோதும் அவரது நோயின் தீவிரம் காரணமாக பல மருத்துவமனைகளில் யசோதா கெய்க் வாட்டை அனுமதிக்க மறுத்து விட்டனர். பல மணிநேர முயற்சிக்குப் பிறகு, மாலை 5:30 மணிக்கு மட்டுமே, அவசர சிகிச்சைக்காக கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் ஏற்பட்ட தாமதம், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் உடனடி குடும்ப ஆதரவு இல்லாத நோயாளிகள் மீதான மருத்துவ நிர்வாகத்தின் அக்கறையின்மை குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அவரது உறவினர்களைத் தேடும் பணியில் இறங்கிய போலீசார், வயதானவருக்கு அந்த குடும்பத்தினர் ஏன் இவ்வளவு மனிதாபிமானமற்ற செயலைச் செய்தார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அவரது புகைப்படம் மும்பை காவல் நிலையங்கள் முழுவதும் பரப்பப்பட்டு, உறவினர்கள் யார் என்பது விசாரணை நடத்திய நிலையில் அவரது உறவினர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து யசோதா கெய்க்வாட் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டி வீட்டில் இருந்து வழிதெரியாமல் ஆரேகாலனிக்கு பகுதிக்கு சென்றுவிட்டதாகவும், நாங்கள் அவரை அங்கு அழைத்து சென்று விடவில்லை எனவும் மூதாட்டியின் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
முதியோர் முன் உள்ள சவால்கள்
‘காற்றில் பறந்த மனிதாபிமானம்’: மும்பையில் பேரனால் குப்பையில் கைவிடப்பட்ட மூதாட்டி!

ஆனால் இதை நம்ப மறுத்த போலீசார் குடும்பத்தினர் கூறும் தகவலின் உண்மை தன்மையை அறிய மூதாட்டி மீட்கப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com