நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Nirmala Sitharaman
Nirmala Sitharaman
Published on

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கட்சிகளுக்கு கருப்பு பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஒழிக்கும் விதமாக, மத்திய பாஜக அரசு சார்பில் தேர்தல் பத்திர திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று உச்சநீதிமன்றம் அதனை சமீபத்தில் ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும் இதன்மூலம் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் நன்கொடை வழங்கப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டதை அடுத்து, இதன்மூலம் பாஜகவினர் பணம் பறித்ததாக புகார்கள் எழுந்தன. மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மத்திய அரசு மிரட்டி பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை நன்கொடை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி இருந்தன.

இந்தநிலையில்தான், தேர்தல் பத்திரம் முறைகேடு, மிரட்டி பணம் பறித்ததாக கூறி பாஜக தலைவர்களுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த தேர்தல் பத்திரத்தை நடைமுறைப்படுத்தியது மத்திய நிதி அமைச்சகம்தான் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உச்சக்கட்டத்தில் போர்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்!
Nirmala Sitharaman

மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் தொடர்ந்த இந்த வழக்கில், பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரம் தொடர்பான புகாரில் நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூர் திலக் நகர் போலீசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்க உத்தரவிட்டது.




Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com