

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2008ல் தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி உட்பட 7 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ல் வழக்கு பதிவு செய்தது. அதாவது 2011ல் அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு 2020ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தான் ஐ.பெரியசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் ஐ. பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏழு பேர் மீதான வழக்குகளை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ. பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.