
2026 பொதுத்தேர்வில் இருந்து, 9, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்யும்போதும், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தை (LOC) சமர்ப்பிக்கும்போதும் APAAR ஐடி கட்டாயம்.
இந்த 12 இலக்க தனித்துவமான எண், மாணவர்களின் கல்வி விவரங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கும். இதன்மூலம், ஆவணங்களை கையாள்வது எளிமையாக்கப்படும்.
தேசிய கல்விக்கொள்கை 2020-ன்படி, இனிமேல் ஒரு மாணவருக்கு, ஒரே அடையாள அட்டை தான். அதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் APAAR ID.
இந்த APAAR ID-ன்னா என்ன? Automated Permanent Academic Account Registry - APAAR ID. இது ஒரு 12 இலக்க அடையாள அட்டை. இதில், ஒரு மாணவரோட எல்லாப் படிப்பு விவரங்களும், சான்றிதழ்களும், பரிசுகளும், சாதனைகளும் ஒரே இடத்தில் டிஜிட்டல் முறையில் இருக்கும்.
இதோட நோக்கம் என்னன்னா, இந்தியாவுல இருக்கிற எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான, எளிமையான கல்வி அனுபவத்தைக் கொடுக்கணும் என்பதுதான்.
இனி மாணவர்கள் தாங்கள் படிச்ச சான்றிதழ்கள், மதிப்பெண்களைக் கையில எடுத்துட்டு அலையத் தேவையில்லை. எல்லாம் இந்த ஐடியில் பாதுகாப்பா இருக்கும்.
ஜூன் 2025-இல் நடைபெற்ற அதன் ஆளும் குழு கூட்டத்தின் அறிக்கையின்படி, 2025-2026 ஆம் ஆண்டு தேர்வுகள் முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களின் பதிவையும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் LOC-யையும் APAAR ஐடியுடன் இணைப்பதற்கான முன்மொழிவுக்கு, வாரியத்தின் தேர்வுக் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட கூட்டத்தின் அறிக்கையில், “பதிவு செயல்முறையின்போதும், LOC சமர்ப்பிக்கும்போதும் APAAR ஐடியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ தலைவர் அனைவரிடமும் வலியுறுத்தினார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி, சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. அதில், 2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு முன்னதாக, 2025-26-ஆம் ஆண்டுக்கான பதிவு மற்றும் LOC சமர்ப்பிப்பு செயல்முறைகள் "விரைவில் தொடங்கும்" என்பதால், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் APAAR ஐடியைப் பெறுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முந்தைய கல்வி ஆண்டு (2024-25)க்கான LOC சமர்ப்பிப்பு மற்றும் பதிவு செயல்முறைகள் செப்டம்பர் 5, 2024 அன்று தொடங்கப்பட்டன.
ஜனவரி 2025-இல், சிபிஎஸ்இ தனது இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கு, மாணவர்களின் முதன்மை அடையாளமாக APAAR ஐடியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.
2024-25 கல்வி ஆண்டு முதல் பள்ளிகளுக்காக கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட APAAR, 2.36 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.