

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் முறையில் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டது.. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வமான பொதுத் தேர்வு கால அட்டவணை https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் https://www.cbse.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மாணவர்களும் பெற்றோர்களும் காண முடியும். கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி உத்தேச அட்டவணை வெளியான நிலையில், தற்போது இறுதி அட்டவணை தேர்விற்கு 110 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.
CBSE அட்டவணையின்படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
10-ம் வகுப்பிற்கு மொத்தம் 83 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. 2026-ம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.கணிதப்பாடத்தில் தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிரெஞ்சு மொழிப்பாடத்துடன் நிறைவடையும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
17 பிப்ரவரி : கணிதம் (தரநிலை / அடிப்படை)
18 பிப்ரவரி : மனையியல்
20 பிப்ரவரி : அழகு & ஆரோக்கியம்; மார்கெட்டிங் & சேல்ஸ்; மல்டிமீடியா; மல்டி-ஸ்கில் ஃபவுண்டேஷன்; உடல் செயல்பாடு பயிற்சியாளர்; டேட்டா சயின்ஸ்
21 பிப்ரவரி : ஆங்கிலம் (தொடர்பு / மொழி & இலக்கியம்)
23 பிப்ரவரி : உருது, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு
25 பிப்ரவரி : அறிவியல்
26 பிப்ரவரி : ரிடெய்ல்; பாதுகாப்பு; தானியங்கி; வங்கி; சுகாதாரப் பராமரிப்பு.. etc
27 பிப்ரவரி : கணினி பயன்பாடுகள்; ஐடி; செயற்கை நுண்ணறிவு
2 மார்ச் : இந்தி (பாடப்பிரிவு A / B)
7 மார்ச் : சமூக அறிவியல்
10 மார்ச்: ஃப்ரெஞ்ச்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
17 பிப்ரவரி : உயிரி தொழில்நுட்பம்; தொழில்முனைவு
18 பிப்ரவரி : உடற்கல்வி
20 பிப்ரவரி : இயற்பியல்
28 பிப்ரவரி : வேதியியல்
12 மார்ச் : ஆங்கிலம்
16 மார்ச் : இந்தி
18 மார்ச் : பொருளாதாரம்
23 மார்ச் : அரசியல் அறிவியல்
25 மார்ச் : தகவலியல் பயிற்சிகள்; கணினி அறிவியல்
27 மார்ச் : உயிரியல்
28 மார்ச் : வணிக ஆய்வுகள்
30 மார்ச் : வரலாறு
4 ஏப்ரல் : சமூகவியல்
9 ஏப்ரல் : மல்டிமீடியா; ஜவுளி வடிவமைப்பு; தரவு அறிவியல்
12 ஆம் வகுப்பை பொறுத்தவரை, உயிரி தொழில்நுட்பம் பாடத்துடன் தொடங்கும் பொதுத்தேர்வு, data science எனப்படும் தரவு அறிவியல் பாடத்துடன் நிறைவடைகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 204 பாடங்களை, சுமார் 45 லட்சம் பேர் எழுத இருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.இத்தேர்வும் 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பதிவிறக்கம்:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான அனைத்து பொதுத்தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும். முழுமையான அட்டவணையை https://www.cbse.gov.in/ என்னும் இணையதளத்தில் சென்று Examinations என்ற டேப்பை கிளிக் செய்யவும். அதன்பின் Data Sheet என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் “CBSE Date Sheet X–XII Final 2026” என்பதை கிளிக் செய்து முழு அட்டவணையை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.
