தலைமை தேர்தல் ஆணையரை நீக்க அதிகாரம் உள்ளதா? அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் உண்மைகள்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நீக்க அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? ஆர்டிகிள் 324 மற்றும் ஜட்ஜஸ் இன்குயரி ஆக்ட் விதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
CJP
Gnanesh kumarThe Prob ,X
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

சமீபத்தில் இரு தேர்தல் ஆணையர்கள் தாங்கள் ஆட்சபனை தெரிவித்தும், தலைமை தேர்தல் ஆணையர் தங்களது ஆட்சேபனையை பரிசீலிக்காமல் தன்னிச்சையாகவே SIR இல் முடிவுகளை எடுத்ததாக கூறியது, நாடு முழுக்க ஊடகங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

கடந்த முறை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வந்ததால், அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பிரதான் சௌதான் ராஜினாமா செய்தார். தற்போது காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் , ஆம் ஆத்மி , திமுக , ராஜ் தாக்கரேவின் சிவ சேனா பிரிவு , மம்தாவின் திருநாமுல் காங்கிரஸ் பிரிவு , திமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

நடந்து முடிந்த தேர்தல்களில் தங்கள் கட்சிகள் படுதோல்வி அடைய காரணம் , SIR மூலம் வாக்குகளை நீக்கியதுதான் காரணம் என்று வாதிடுகின்றனர். கரப்பான் பூச்சி கட்சியும் 48 மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் , கடந்த ஆண்டு SIR மூலம் நீக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கரப்பான் பூச்சி கட்சியின் முந்தைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து, தற்போதும் அது போன்று தேர்தல் ஆணையரின் ராஜினாமா நடைபெறுமா?என்பதுதான் நாடு முழுக்க எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அதற்கு சட்டத்தில் ஏதேனும் வழிவகை உள்ளதா? என்பதை குறித்து காணலாம்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324, உட்பிரிவு (5)-ன் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி காலம் மற்றும் பணிப் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் படி, தேர்தல் ஆணையத்திற்கு எந்த வித அரசியல் அழுத்தமும் கொடுக்க முடியாது. அது தொடர்ந்து நடுநிலைத் தன்மை உடன் சுதந்திரமாக செயல்படுவதற்கு தான் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான பணி பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

CJP
CJPx

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 124(4)-ன் கீழ், தலைமை தேர்தல் ஆணையரால் உடல்நலம் அல்லது மனநலம் குறைவால் பணிபுரிய இயலாமை(Incapacity) அல்லது அதிகாரத்தில் இருக்கும் பொழுது நெறிமுறைகளை மீறுவது , நிரூபிக்கபட்ட தவறான நடத்தை (Proved Misbehaviour) போன்ற காரணங்களின் அடிப்படையில் தான் அவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.

மேற்கூறிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்க பின்பற்றப்படும் அதே நடைமுறையை (Judges Inquiry Act, 1968) பின்பற்றி தலைமை தேர்தல் ஆணையரை நீக்க முடியும். இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்ய விடும். அதற்கு மக்களவையின் 100 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தும், மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின் கையெழுத்தும் கட்டாயம் தேவை.

ஆனாலும் , இதை ஆய்வு செய்து ஏற்பதும் நிராகரிப்பதும் சபாநாயகரின் முடிவாகும். ஒருவேளை தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் இறுதி ஒப்புதலுக்கு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதல் பெற்ற பின்னரே தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

​​நீட் தேர்வு முறைகேடு ராஜினாமாவிற்கும் , SIR வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. SIR தொடர்பாக முறைகேடு நடந்ததற்கு அதிகாரப் பூர்வமான ஆதாரங்களை யாரும் சமர்ப்பிக்கவில்லை. மேலும் எந்த எதிர்க்கட்சியும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவும் செய்ய வில்லை.

இதன் நடைமுறைகளை பின்பற்றினாலும் பாராளுமன்றத்தில் 3 இல் 2 பங்கு பெரும்பான்மை எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதால் , தலைமை தேர்தல் ஆணையரின் பதவி நீக்கம் சாத்தியமற்றது. அதனால் தான் எதிர்கட்சிகள் அவரை சுயமாக ராஜினாமா செய்ய வைக்க போராடுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com