இந்த 5 நாடுகளில் காதலர் தினம் கொண்டாடினால் அவ்வளவுதான்!

Celebrating Valentine's Day Banned in these 5 countries.
Celebrating Valentine's Day Banned in these 5 countries.

நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், குறிப்பிட்ட 5 நாடுகளில் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தடை விதிக்கும் அளவுக்கு காதலர் தினம் கொண்டாடுவது என்ன அவ்வளவு மோசமானதா? 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளுக்கான கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விடுகிறது. ஹக் டே, கிஸ் டே, சாக்லேட் டே, ரோஸ் டே என பல டேக்களை வரிசை கட்டி கொண்டாடுகிறார்கள் காதல் கடலில் மூழ்கிக் கிடப்பவர்கள். குறிப்பாக காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐந்து நாடுகளில் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பலருக்கு ஏன் இப்படி அறிவித்துள்ளார்கள்? என்ற கேள்வியை எழுப்பிள்ளது.

இதையும் படியுங்கள்:
Fitness Band இத்தனை விஷயங்கள் செய்யுமா? இது முதல்லயே தெரியாம போச்சே!
Celebrating Valentine's Day Banned in these 5 countries.
  1. காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த முதல் நாடு சவுதி அரேபியா. இந்நாட்டில் காதலர் தினம் கொண்டாடினால் உடனடியாக கைது தான். இதனால் இளைஞர்கள் கெட்டுப்போய் விடுகிறார்கள் என்ற நம்பிக்கை இந்நாட்டில் பல காலமாகவே இருந்து வருகிறது. 

  2. அடுத்ததாக மலேசியாவும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இங்கே காதலர் தினம் கொண்டாட அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  3. உஸ்பெகிஸ்தான் நாட்டில் பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடுவதால், கடந்த 2012 இல் இருந்தே அங்கு காதலர் தினக் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. 

  4. பாகிஸ்தான் காதலர் தினக் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடுவதில்லை. 

  5. ஈரான் நாட்டில் கடந்த 2010-க்குப் பிறகு காதலர் தினம் கொண்டாட கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காதலர் தினத்தை சீரழிவு விழாவாக அறிவித்துள்ள ஈரான் நாட்டு அரசு, அந்நாளில் காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதையும் தடை செய்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com