Fitness Band இத்தனை விஷயங்கள் செய்யுமா? இது முதல்லயே தெரியாம போச்சே!

Fitness Band
Fitness Band
Published on

இன்றைய வேகமான உலகில் நல்ல ஆரோக்கியத்தையும், உடல் தகுதியையும் பராமரிப்பது பல நபர்களின் முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. இதில் Fitness Band-கள் மக்கள் மத்தியில் பிரபலமான கேஜக்டுகளாக உருவாகியுள்ளன. இவை நமது அன்றாட நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து உடனடி தகவல்களை நமக்கு வழங்குவதால், நமது ஆரோக்கியம் சார்ந்த முடிவுகளை எடுக்க உதவுகின்றன. சரி வாருங்கள் இந்த பதிவில் ஃபிட்னஸ் பேண்ட்கள் நமக்கு எந்தெந்த வகையில் உதவுகிறது எனப் பார்க்கலாம். 

1. Activity Tracking: ஃபிட்னஸ் பேண்டுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நாள் முழுவதும் நம்முடைய செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகும். தினசரி எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எவ்வளவு கலோரிகள் எரித்தீர்கள் போன்ற உடல் சார்ந்த எல்லா செயல்பாட்டு நிலைகளின் முழு விவரங்களையும் இது வழங்குகிறது. மேலும் உடற்பயிற்சி இலக்குகளை அமைப்பதற்கும், அதை சரியாக அடைவதற்கும் இந்த ஃபிட்னஸ் பேண்ட் விலைமதிப்பில்லாத ஒன்றாகும்.

2. Heart Rate Monitoring: பிட்னஸ் பேண்டுகள் அதில் இருக்கும் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்ஸார்கள் மூலமாக, உங்கள் இதயத்துடிப்பை நாள் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கும். இந்த அம்சம் உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும். இதயத்துடிப்பை கண்காணிப்பதன் மூலமாக உங்களது உடற்பயிற்சிகளை மேம்படுத்தலாம் மற்றும் அதிகபட்ச செயல் திறனுடன் நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. 

3. Sleep Tracking: நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் போதுமான தூக்கம் அவசியம். உறக்கத்தை கண்காணிக்கும் திறன் கொண்ட ஃபிட்னஸ் பேண்டுகளால் உங்களின் மொத்த உரக்க கால அளவு, உரக்க நிலைகள் மற்றும் உங்கள் தூக்கத்தின் தரம் உட்பட உங்களின் முழு தூக்க முறைகளைக் கண்காணிக்க முடியும். இந்த டேட்டாக்களை நீங்கள் தெரிந்து கொள்வது மூலமாக, உங்களின் தூக்க நிலைகளைத் தெரிந்து கொண்டு, சிறந்த தூக்கத்திற்குத் தேவையான மாற்றங்களை செய்யலாம்.

4. Sedentary Remainders: இன்றைய காலத்தில் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம். நீண்ட நேரம் எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது உடல் நலத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிட்னஸ் பேண்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில், நீங்கள் அசைவை செய்ய வேண்டும் என்பதற்கான நோட்டிபிகேஷன்களை அனுப்புவது மூலமாக, நீங்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது தடுக்கப்படுகிறது. இந்த நோட்டிபிகேஷன் உங்களுக்கு அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தடுக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
‘கடைசி விவசாயி’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதை ஒப்படைத்த கொள்ளையர்கள்!
Fitness Band

5. Fitness Goals: ஃபிட்னஸ் பேண்ட்டை ஸ்மார்ட்போன் உடன் இணைத்து, உங்களது தனிப்பட்ட உடற்பயிற்சி இலக்குகளை அமைத்து அதை செயல்படுத்த உதவுகிறது. நீங்கள் தினசரி எவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்கிறீர்கள் என்பதை அதிகரிக்க விரும்பினாலும், குறிப்பிட்ட கலோரி அளவை எரிக்கும் இலக்கை அடைய விரும்பினாலும் அல்லது உறங்கும் நேரத்தை மேம்படுத்த விரும்பினாலும், இதில் இருக்கும் அம்சங்கள் உங்களது முன்னேற்றத்தைக் கண்காணித்து உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படுகிறது. 

6. Stress Management: நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சுவாச பயிற்சி மற்றும், மன அழுத்த நிலை அளவீடு போன்ற கண்காணிப்பு அம்சங்கள் சில ஃபிட்னஸ் பேண்டுகளில் இருக்கிறது. இந்த அம்சமானது உங்களது மன அழுத்த நிலையை மேலும் அறிந்து, அதை நிர்வகித்து குறைக்க சில நுட்பங்களை வழங்கி உதவுகிறது. இதன் மூலமாக உங்களது மனநலத்தையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com